ADS

AD

Saturday, April 25, 2009

கலைஞர் தந்தி அடிப்பதை தவிர வேறு என்ன செய்யலாம் ...?

 

- பாஸ்கரன் சுப்ரமணியன்

லங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு 2 முறை தந்தி அடித்தார் நமது தமிழின தலைவர் அவர்கள்.

அவருக்காக கோரிக்கை அனுப்ப சில பல எளிய வழிகள்...

 

(1) குடும்பத்துடன் நடை பயணமாக டெல்லி சென்று மனு கொடுக்க போவதாக அறிவிக்கலாம். (வருட கணக்கில் பிரச்னையை இழுக்க சிறந்த வழி)

 

(2) அமைச்சர்களுடன் சைக்கிள் பயணமாக டெல்லி சென்று மனு கொடுக்க போவதாக கூறலாம்.

 

(3) மாட்டு வண்டி கட்டிக்கொண்டு டெல்லி செல்ல இருப்பதாக கூறலாம்.

 

(4) புறா வழி தூது அனுப்ப எண்ணுவதாக செய்தி வெளியிடலாம்.

 

(5) நுங்கு வண்டி செய்து அதனை உருட்டிய படி செல்வதாக கூறலாம்.

 

(6) சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மராத்தான் ஓட்டம் டெல்லி வரை ஓட இருப்பதாக கூறலாம்.

 

(7) தங்க நாற்கர சாலையில் சைக்கிள் டயர் அடித்து உருட்டியபடி டெல்லி செல்லலாம்.

 

(8) வாடகை சைக்கிள் ரிக்சா பிடித்து டெல்லி சென்று மனு கொடுக்கலாம்.

 

இப்படி எதாவது ஒரு காரணத்தை கூறி ஒரு விஷயத்தை இழுக்க என்ன வேண்டுமானாலும் கூறலாம்.

 

இவரது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா முழுதும் தொலைபேச ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா தொலைபேசி திட்டம் கொண்டு வந்ததாக தம்பட்டம் அடிக்கும் பெரியவருக்கு, இலங்கையில் தமிழருக்கு பேரிழப்பு ஏற்படும் போது இன்னும் தந்தி அடிக்கும் முறை மட்டுமே ஞாபகம் வருவது ஆச்சரியம் அளிக்கிறது.

 

இந்த கட்டுரையை பின்வரும் இணைய தளத்திலும் காணலாம். திரு.பாஸ்கரன் சுப்ரமணியம் அவர்களால் எழுதப்பட்டது.

http://youthful.vikatan.com/youth/baskaranarticle23042009.asp

இவரது பிற படைப்புகளைக்காண http://bashkaran.blogspot.com/ செல்லுங்கள்

2 comments:

சிக்கிமுக்கி said...

வானூர்தி நிலையம் வரை நடந்தே சென்று தில்லிக்கு வானூர்தியில் செல்வதாகவும் சொல்ல்லாம்!

வரவேற்பு வழியனுப்பு முடிந்து நடந்து முடிவதற்குள் கதைமுடிந்துவிடும்!

ttpian said...

உண்மை வசந்தன்!
என்னுடைய எல்லா கருத்துகலிலும்,இதை கோடிட்டு காட்டியுள்ளேன்!
இந்த மலயாலிகலுக்கு வென்சாமரம் வீசும் கிழத்தை பார்த்தீர்கலா?
நான் எங்குபோய் செல்வேன்?