ADS

AD

Friday, February 6, 2009

கைகழுவும் காங்கிரஸ்... கரம் நீட்டும் பிஜேபி...





கைகழுவும்  காங்கிரஸ்...  கரம்  நீட்டும்  பிஜேபி...

இலங்கையில்  நடைபெற்று  வரும்  இனப்படுகொலைகள்.. 

புலிகளின்  கோட்டை  முல்லைத்தீவுக்கே  வந்து  விட்ட  இலங்கை  ராணுவம்...  அப்பாவித்தமிழர்களின்  அளப்பரிய  உயிரிழப்பு... 

குழந்தைகள்,  பெண்கள்  யாருமே  தப்ப  முடியா  சொல்லொணா  சோகம்...

உலகெங்கும்  கண்டனக்குரல்கள்... 

ஐ.நா.  உள்ளிட்ட  அமைப்புகளின்  கண்டணங்களும்  காற்றில்  பறக்கின்றன....   சிங்களஅரசு  போர்  நிறுத்தம்  என்ற  பேச்சுக்கே  இடமில்லை  என்று  கொக்கரிக்கிறது...

இலங்கைக்கு  ஆயுதம்  உதவும்  இரக்கமில்லா  சீனா,  இஸ்ரேல் நாடுகள்..


அடுத்த  கட்ட  நடவடிக்கைக்காக  இலங்கை  அதிபரின்  தம்பியும்,  ராணுவத்தளபதியுமான  கோத்தபய  ராஜபக்ஷே  (  என்ன  பேரோ)  ஆலோசனை  நடத்துகிறார்.   முல்லைத்தீவில்  தங்கி  இருப்போர்  அப்பாவித்தமிழர்  அல்ல   அவர்கள்  புலிகளிடம்  பயிற்சிபெற்ற  போராளிகள்  அவர்களை  பூண்டோடு  அழிப்பேன்  என்கிறார். 

அவர்கள்  பொதுமக்கள்  அல்ல  என்கிறார். 


அவசரநிலை  பிரகடனம்  செய்து  முல்லைத்தீவை  முற்றிலும்  அழிக்கத்திட்டம்  தீட்டியுள்ளார்.

ஆனால்  இதில்  இந்தியாவின்  பங்கு  என்ன?  இந்திய  ராணுவம்  இலங்கை  ராணுவத்திற்கு  புலிகளை  அழிக்க  வியூகம்  வழங்குகிறதா  என்பது  மில்லியன்  டாலர்  கேள்வி..


சிறையில்  இருக்கும்  நளினியை  பார்த்து  வந்த  ராஜீவ்  காந்தியின்  புதல்வி  ஏதோ  மன்னிப்பு  கொடுத்து   வந்ததற்கும்  இப்போது  புலிகளை  அழிக்க,   விடுதலைப்புலிகளை  வீழ்த்துவதற்கு  காங்கிரஸ்  கட்சித்தலைவர்கள்  காட்டும்  தீவிரத்தையும்  பார்த்தால்  என்னவோ  நெருடுகிறதே... இங்கே பரிதாபப்படுவது... அங்கே பழிவாங்குவதா? எங்கே உங்கள் மனிதாபிமானம்?

ஆக  காங்கிரஸ்  ஆட்சி  முடிய  இன்னும்  சில  மாதங்களே  உள்ள  நிலையில்  இலங்கைத் தமிழர்களைக்கூண்டோடு  அழிக்க  முயல்கிறது  சிங்கள  அரசு...  அதுவும்  இந்திய  காங்கிரஸ்  அரசு  உதவியுடன்…  அதற்கு (காங்கிரஸ்  அரசுக்கு ) துதி பாடும் சில தமிழகத்தலைவர்கள்...

 

இலங்கையில்  அவசர  நிலைப்பிரகடனம்  செய்தால்  அதைப் பார்த்துக் கொண்டு  பிஜேபி   வேடிக்கை  பார்த்துக்கொண்டு  இராது  என்கிறார்கள்  பிஜேபியின்  தலைவர்கள்.

 

ராஜீவ்  காந்தி  கொலை  குறித்து   சி.பி.ஐ.விசாரணை செய்து  அறிந்திருக்க  வேண்டிய  காங்கிரஸ்  ஐந்தாண்டு  காலமாகத்தூங்கிவிட்டு,  ஆட்சி  முடிந்து  மக்களால்  வெளியேற்றப்படும்  தருணத்தில்  ராஜீவ்  காந்தியின்  படுகொலைக்கான  பழிவாங்கலை  தற்போது  நிறைவேற்றத் துடிக்கிறது

 இலங்கை  அரசின்  இனப்படுகொலைகளுக்கு  முடிவுகட்ட  பிஜேபியின்  மூத்த  தலைவர்கள்  அத்வானி,  நரேந்திர  மோடி  ஆகியோர்  மனது  வைத்தால்  இதற்கு  ஒரு நல்ல தீர்வு  கிடைக்கும்..

 நடக்கும்  என  எதிர்பார்ப்போம் …

  ஆனாலும் தற்போது புலிகள் பதுங்கி இருப்பது என்னவோ  பாய்ச்சலுக்காகத்தான் இருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. அப்படி எதுவும் நடந்தால் அது ராஜபக்க்ஷே அரசுக்கு விழும் கடுமையான அடியாக இருக்கலாம். இருக்கும்…