ADS

AD

Tuesday, December 30, 2008

சுமைதாங்க முன்வருமா அரசாங்கம்

…… தமிழகத்தில் தொழில் முனைவோர் கண்ணீர்

 

நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் நாம் சிந்தும் உதிரத்தில்

யாருக்கோ அள்ளிவிடும் அரசாங்கச்சட்டங்கள்

ஊர் கெடுக்கும் மனிதரெல்லாம் உண்மையை உதறிவிட்டு

புல்வளர்க்கப் பயிரழித்துப் போடுகிறார் திட்டங்கள்,

ஓய்வெடுக்க நேரமின்றி ஊர்பிழைக்க தான் பிழைக்க

உழைக்கின்ற மனிதர்துயர் அறிந்ததவர்கள் யாரின்று

ஆய்வெடுத்து ஆவணத்தில் எழுதிப்பார் உண்மைசுடும்

உண்மையான தொழிலாளி முதலாளி தானென்று;

 

யார்கேட்டார் செவிமடுத்து; அலட்சியமாய் இருந்ததினால்

நேர்கோட்டில் போகாமல் சீர்கெட்ட மின்சாரம்,

ஊர்கூட்டி அழுதென்ன; ஊடகங்கள் எழுதியென்ன

இறங்குமுகம் காணும் தொழிலோடு வியாபாரம்,

நாள்காட்டி பார்க்காமல் நலம் துக்கம் கேட்காமல்

தோளேற்றிச் சுமந்தவர்கள் தெருவிறங்கும் கலிகாலம்,

வாய் பூட்டி மெளனிகளாய் வாடுகின்ற நன்மக்கள்

மேடேறச் சுமைதாங்க முன்வருமா அரசாங்கம்;

 

வெறுங்கையில் முழம்போடும் வித்தைகளைக் கற்றவனும்

சாத்தானின் வேதத்தைச் சரியென்று சொல்பவனும்,

பிறர்கையில் சிந்துகின்ற தேன்வழித்துக் குடிப்பவனும்

பல்லிளித்து தீயோர்க்குப் பல்லாக்குச் சுமப்பவனும்,

பெருமழையில் நனைபவரின் விழிநீரைப்பொய்யென்று

மிரட்டுவதும் உருட்டுவதும் சிறுகதையா, தீவினையா,

சிறுதொழிலும் பெருந்தொழிலும் கைவிட்டுப் போனபின்னர்

மீண்டுமது தளைத்துயர மந்திரத்து மாங்கனியா;

 

ஆள்பவர்க்கு ஐந்தாண்டு முடிந்து போகும்

அடுத்துவரும் தலைவருக்கு விடிந்து காணும்,

கேட்பவர்க்குத் தினம் கொடுத்துச் சோர்ந்து போகும்

தொழில் முனைவோர் பட்ட பாடு என்னவாகும்,

நாளைவரும் புத்தாண்டு பொங்கல்நாளில்

நான் பாடும் விருத்தத்தின் வருத்தம் கேட்டு,

வேலமரும் பலகரமும் விளங்குகின்ற ஆறுமுகம்

மயிலமரும் திருமுருகா வழியைக்காட்டு!

 

..... நன்றி. திரு.சுப்பிரமணியம் M.D (iakoka) அவர்களுக்கு.

முருகன் நல்வழி காட்ட இப்பொங்கல் திருநாளில் வேண்டிக்கொள்வோம்.

 

 

Monday, December 29, 2008

வருக 2009

எழுந்த பெட்ரோல் விலை குறையட்டும்
வீழ்ந்த பொருளாதாரம் எழுகட்டும் !

பங்கு சந்தைகள் ஏறட்டும் பணவீக்கம் தணியட்டும் !

நித்தம் ஒரு குண்டு என்ற நிலைமை மாறட்டும் !
நிம்மதியாய் மக்கள் பெரும் மூச்சு விடட்டும் !

போருக்கு அஞ்சும் அரசியல்வாதிகளை வரும் ஆண்டு மாற்றட்டும் !

மரணம் என்பது பொதுவென்று எதிரிக்கு நம் படை காட்டட்டும் !

இடிந்த போன தமிழீழம் இனி மேலாவது வாழட்டும் !
இலங்கையின் அரசியலுக்கு இயற்கை பதில் சொல்லட்டும் !

ஈழத்தை பற்றி பேசும் போது காதை கூர்மையாய்
தண்ணீர் பற்றி பேசும் போது மந்தமாய் 

கேட்கும் காதுகள் தெளிவாய் கேட்கட்டும் !

மரங்களாக வாழ்ந்த தமிழர்கள் புத்தாண்டில் மனிதனாக வாழட்டும் !

நன்றி: குகன்

கட்டணமில்லா தொலைபேசி சேவைகள் சில

விமானசேவை

 

இந்தியன் ஏர்லைன்ஸ்:    1800 180 1407

ஜெட் ஏர்வேஸ்:              1800 22 5522

ஸ்பைஸ் ஜெட்:              1800 180 3333

ஏர் இந்தியா:                  1800 22 7722

கிங்பிஷர்:                      1800 180 0101

 

வங்கிகள்

 ஏ பி என் ஆம்ரோ:         1800 11 2224

கனரா வங்கி:                 1800 44 6000

கார்பொரேஷன் வங்கி:   1800 44 3555

எச்டிஎப்சி வங்கி:            1800 227 227

ஐசிஐசிஐ வங்கி:             1800 333 499

ஐசிஐசிஐ வங்கி (என் ஆர் ஐ): 1800 22 4848

ஐடிபிஐ வங்கி:               1800 11 6999

இந்தியன் வங்கி:            1800 425 1400

ஐஎன்ஜி வைஸ்யா:         1800 44 9900

கோடக் மஹிந்த்ரா:        1800 22 6022

லார்ட் கிருஷ்ணா வங்கி:1800 11 2300

பஞ்சாப் நேஷனல்:         1800 122 222

ஸ்டேட் வங்கி:               1800 44 1955

ஸிண்டிகேட் வங்கி:        1800 44 6655

Tuesday, December 16, 2008

ஸ்பெக்ட்ரம் ஊழல்


எலியும் பூனையுமாக இருந்த மாறன் குடும்பமும் கருணாநிதி குடும்பமும் காலத்தின் கட்டாயத்தாலும் அரசியல் சூழ்நிலைகளினாலும் ஒருவழியாக ஒன்று சேர்ந்துவிட்டார்கள். குடும்பப் பிரச்சனையாக வீட்டோடு இருக்க் வேண்டியதை கண்ணீர் ததும்பும் கட்டுரைகள் எழுதியும், கனல் கக்கும் கவிதைகள் புனைந்தும் குடும்பத் தகராறை பொதுமேடைக்கு எடுத்து வந்தார் கருணாநிதி. சரமாரியான குற்றச்சாட்டுகளை கருணாநிதி எழுப்பினாலும் கலாநிதி மாறன் எழுப்பிய பரபரப்பான கேள்விகளுக்கு இன்று வரை கருணாநிதியிடம் இருந்து பதிலே இல்லை. சண்டைக் காலத்தில் என்ன நடக்கிறது என்று சொன்ன கருணாநிதி, சமாதானத்துக்கான காரணத்தையும் வெளிப்படையாகச் சொல்லக் கடமைப்பட்டவர் ஆனாலும் அவர் சொல்ல மாட்டார் என்பது நிச்சயம்.

 

சமீபத்தில் டெல்லி சென்றிருந்த கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையின் கதி என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 'அது முடிந்து போன விஷயம்' என்று பதில் கூறி மக்களை அதிர வைத்திருக்கிறார் தமிழக முதல்வர். கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ஊழல் இந்த டெண்டர் விவகாரத்தில் நடந்துள்ளதாக நம்பப்படும் இந்த விஷயம் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வதால் எப்படி ஒரு முடிவுக்கு வரமுடியும்?

 

இந்தியாவை அதிர வைத்த போபர்ஸ், டான்ஸி உள்ளிட்ட பல ஊழல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்திய ஊழல் சரித்திரத்தில் முதலிடம் பெற்ற பெருமை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு உண்டு. தயாநிதி மாறன் தொலைதொடர்பு மந்திரியாக இருந்த போது அவரால் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று அவருக்கு அடுத்து அமைச்சரான ராசா தெரிவித்தார். சில நாட்களில் ராசா செய்த குளறுபடிகளால் தொலைத் தொடர்புத் துறைக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தயாநிதி மாறன் மட்டுமல்லாமல் மத்திய எதிர்கட்சி எம்.பி.க்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள் - மேலும் இந்த விவகாரம் குறித்து டெல்லி மீடியாக்களும் தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளன. தயாநிதி மாறனோ அல்லது ராசாவோ - நடந்த குளறுபடிகளுக்கு அவர்களது கட்சித் தலைவர் என்ற முறையில் கருணாநிதியே பொறுப்பாவார்.  அப்படி இருக்க தங்களது சொந்த குடும்பச் சண்டை தற்காலிகமாக ஓய்ந்ததால் ஸ்பெக்ட்ரம் விவகாரமே முடிவுக்கு வந்து விட்டது என்று கருணாநிதி அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்?

 

ஏற்கனவே நாட்டின் நிதிநிலைமை பாதுகாப்பு தீவிரவாதம் உள்ளிட்ட பல விஷயங்களில் மத்திய அரசின் நிலை பாட்டால் மக்கள் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள். டெல்லியிலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது தங்களது பலத்தாலோ அல்லது மக்கள் அவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையாலோ அல்ல - எதிர்கட்சிகளின் மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால்தான். இதை உணர்ந்து தி.மு.க தலைவரது கட்டளைகளையும் மீறி மத்திய அரசு ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் முறையான விசாரணை நடத்த முன் வரவேண்டும். போபர்ஸ் விவகாரம் தான் ராஜீவ் அரசை பதவியிழக்க வைத்தது - இத உணர்ந்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வைத்தால் நாட்டுக்கு நல்லது.

 

- மீனா [feedback@tamiloviam.com

 

இன்றைய குறள்
Monday, December 15, 2008

இந்த ஆண்டின் சிறந்த கவிதை


When I born, I black
When I grow up, I black
When I go in Sun, I black
When I scared, I black
When I sick, I black
And when I die, I still black

And you white fellow
When you born, you pink
When you grow up, you white
When you go in sun, you red
When you cold, you blue
When you scared, you yellow
When you sick, you green
And when you die, you gray

And you calling me colored?

இந்த அருமையான கவிதையை மின்னஞ்சலில் அனுப்பிவைத்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி

Wednesday, December 10, 2008

சில பயனுள்ள(?) தகவல்கள்.... பாகம்....1

ஏலக்காய்: ஏலக்காயின் தோலை எளிதாக நீக்க பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு வெந்நீரில் ஊறவைத்தபின் உரிக்கவும்

 எறும்புத்தொல்லையா:  சர்க்கரை டப்பாவில் இரண்டு அல்லது மூன்று கிராம்புத் துண்டுகளைப் போட்டுப் பாருங்கள்

 பிஸ்கட் மொரமொரக்க: பிஸ்கட் டின்னின் கீழே ஒரு சிறிய பிளாட்டிங் பேப்பரை போட்டுப் பாருங்கள்

 ஆப்பிள் சிவக்காமல் இருக்க:  கொஞ்சம் எலுமிச்சை சாற்றினை அறுத்த ஆப்பிளின் மேல் தடவ ஆப்பிளின் நிறம் மாறாமல் இருக்கும். ஆப்பிளும் ப்ரெஷாக இருக்கும்

 தேள்கடி வலியா: கொஞ்சம் புகையிலையுடன் ஒரு துளி நீர் சேர்த்து கடிமேல் வைத்து பாண்டேஜ் பொட்டால் வலி உடனே மறையும்

 பாகற்காய்: பாகற்காய் சமைப்பதற்கு அரைமணி நேரம் முன்னதாக அறுத்து கொஞ்சம் உப்பு, கோதுமை மாவு மற்றும் தயிர் கலந்த கலவையில் தேய்த்து பின் சமைக்கவும்

 கொத்துமல்லி இலை: அலுமினியக்காகிதத்தில் சுற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைத்துப்பாருங்கள். புத்தம் புதியதாகவே இருக்கும்.

 பாத்திரம் அடிப்பிடித்துவிட்டதா: கொஞ்சம் உறித்த வெங்காயத்துண்டுகளுடன் கொதிக்கும் நீர் ஊற்றி ஐந்து நிமிடம் வைத்திருந்து பின் கழுவிப்பாருங்கள். சுத்தமாக இருக்கும்.

 மிளகாய்த்தூள்: மிளகாய்த்தூள் டப்பாவில் சிறிதளவு பெருங்காயம் போட்டு வைத்தால் மிளகாய்த்தூள் வெகுநாள்வரை அப்படியே இருக்கும்.

 

இன்னும் வரும்….

Tuesday, December 9, 2008

கூகுள் தரும் அற்புத SMS வசதி

பிரபல செர்ச் எஞ்சின் கூகிள் நிறுவனம் தற்போது நமது ரயில்வேத்துறையுடன் இணைந்து 10 இலக்கங்கள் கொண்ட மொபைல் எண் வழங்கியுள்ளது. இந்த எண்ணுக்கு உங்கள்  PNR எண்ணை  SMS செய்தால் டிக்கெட்டின் தற்போதைய நிலவரம் உடனே கிடைக்கும். இந்த வசதிக்கு கூடுதல் கட்டனம் கிடையாது என்பது ஒரு சிறப்பம்சம். IN NORMAL RATES ONLY. அந்த எண் 9773300000. இந்த எண்ணுக்கு முன்னால் +0 அல்லது +91  இட வேண்டியதில்லை.

 என்ன உங்கள் மொபைல் போனில் இந்த எண்ணை சேமித்து விட்டீர்கள் தானே.

 மேலும் விபரங்களுக்கு இங்கு சென்று பாருங்களேன்

Wednesday, December 3, 2008

LETTER TO PRIME MINISTER


Dear Mr. Prime Minister,

I am a typical mouse from Mumbai. In the local train compartment which has capacity of 100 persons, I travel with 500 more mouse. Mouse at least squeak but we don't even do that.

Today I heard your speech. In which you said 'NO BODY WOULD BE SPARED'. I would like to remind you that fourteen years has passed since serial bomb blast in Mumbai took place. Dawood was the main conspirator. Till today he is not caught. All our bolywood actors, our builders, our Gutka king meets him but your Government can not catch him. Reason is simple; all your ministers are hand in glove with him. If any attempt is made to catch him everybody will be exposed. Your statement 'NOBODY WOULD BE SPARED' is nothing but a cruel joke on this unfortunate people of India.

Enough is enough. As such after seeing terrorist attack carried out by about a dozen young boys I realize that if same thing continues days are not away when terrorist will attack by air, destroy our nuclear reactor and there will be one more Hiroshima.

We the people are left with only one mantra. Womb to Bomb to Tomb. You promised Mumbaikar Shanghai what you have given us is Jalianwala Baug.

Today only your home minister resigned. What took you so long to kick out this joker? Only reason was that he was loyal to Gandhi family. Loyalty to Gandhi family is more important than blood of innocent people, isn't it?

I am born and bought up in Mumbai for last fifty eight years. Believe me corruption in Maharashtra is worse than that in Bihar. Look at all the politician, Sharad Pawar, Chagan Bhujbal, Narayan Rane, Bal Thackray , Gopinath Munde, Raj Thackray, Vilasrao Deshmukh all are rolling in money. Vilasrao Deshmukh is one of the worst Chief minister I have seen. His only business is to increase the FSI every other day, make money and send it to Delhi so Congress can fight next election. Now the clown has found new way and will increase FSI for fisherman so they can build concrete house right on sea shore. Next time terrorist can comfortably live in those house , enjoy the beauty of sea and then attack the Mumbai at their will.

Recently I had to purchase house in Mumbai. I met about two dozen builders. Everybody wanted about 30% in black. A common person like me knows this and with all your intelligent agency & CBI you and your finance minister are not aware of it. Where all the black money goes? To the underworld isn't it? Our politicians take help of these goondas to vacate people by force. I myself was victim of it. If you have time please come to me, I will tell you everything.

If this has been land of fools, idiots then I would not have ever cared to write you this letter. Just see the tragedy, on one side we are reaching moon, people are so intelligent and on other side you politician has converted nectar into deadly poison. I am everything Hindu, Muslim, Christian, Schedule caste, OBC, Muslim OBC, Christian Schedule caste, Creamy Schedule caste only what I am not is INDIAN. You politician have raped every part of mother India by your policy of divide and rule.

Take example of former president Abdul Kalam. Such a intelligent person, such a fine human being. You politician didn't even spare him. Your party along with opposition joined the hands, because politician feels they are supreme and there is no place for good person.

Dear Mr Prime minister you are one of the most intelligent person, most learned person. Just wake up, be a real SARDAR. First and foremost expose all selfish politician. Ask Swiss bank to give name of all Indian account holder. Give reins of CBI to independent agency. Let them find wolf among us. There will be political upheaval but that will better than dance of death which we are witnessing every day. Just give us ambient where we can work honestly and without fear. Let there be rule of law. Everything else will be taken care of.

Choice is yours Mr. Prime Minister. Do you want to be lead by one person or you want to lead the nation of 100 Crore people?

Prakash B. Bajaj
Chandralok 'A" Wing, Flat No 104
97 Nepean Sea Road
Mumbai 400 036
Phone 98210-71194

Tuesday, December 2, 2008

How is this?

பல கடவுளரா, ஒரே கடவுளா?வீட்டில் சுழலும் மின்விசிறி காற்று வீசுகிறது. அதே வீட்டின் குளியலறையில் இருக்கும் வெந்நீர்த் தொட்டியில் சுடுநீர் வருவதற்கும் காரணம் அதே மின்சாரம்தான். அதே மின்சாரம் ஏ.சி.யில் குளிர்ச்சியைத் தருகிறது. மின்விளக்கில் ஒளியாக இருக்கிறது.

எனக்கு ஆற்றலின் இந்தப் பல வடிவங்கள் பிடிக்கவில்லை என்று சொல்கிறவன் நேரடியாக மின்சாரக் கம்பியைத் தொட்டால் ஷாக் அடித்து விழவேண்டியதுதான். மின்சாரம் நேரடியாக எந்தப் பலனையும் தருவதும் கிடையாது.

குணம் குறியில்லாத இறைத்தத்துவம் எல்லாவற்றையும் கடந்தது. அது கடவுள், பிரம்மம் என்ற சொற்களுக்கும். ஏன் மனதுக்கும் கூட அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட ஓர் இறைவனைச் சொல் வடிவத்தில் அழைக்கும்போதே அதற்கு ஒரு பெயர் வந்து விடுகிறது. அவரைச் சிம்மாசனத்தில் அமர்த்தும்போதே அவருக்கு ஓர் வடிவம் இருப்பது உணர்த்தப்படுகிறது. ஆகவே வடிவம், பெயர் இல்லாத கடவுளைத் தொழுபவர்களின் நூல்கள் கூட அவரை வர்ணிக்கத் தொடங்கும்போது அவருக்குப் பெயரும் வடிவமும் வந்துவிடுகிறது.

ஆனாலும் சனாதனமான இந்து மதம் பெயரும் உருவமுமற்ற கடவுளையும் ஏற்கிறது. அதே நேரத்தில் கடவுளை மனிதன் எந்த வடிவில் அழைக்கிறானோ அந்த வடிவில் வந்து அருளைத் தர வல்லவன் என்ற தத்துவத்தையும் ஏற்கிறது. எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் வல்லவன் என்று கூறும்போதே இறைவன் எல்லாவற்றிலும் இருக்கிறான், எந்தப் பெயரில் பக்தியோடு அழைத்தாலும் வருவான் என்பவற்றையும் ஒப்புக்கொண்டுதானே ஆக வேண்டியிருக்கிறது?

வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி
ஊனாகி, உயிராகி, உண்மையுமாய், இன்மையுமாய்

என்று பள்ளிக்கூடத்திலே புரிந்துகொள்ளாமலே படித்தோம். கடவுள் இருக்கிறார் என்று சொல்பவருக்கு உண்மைத் தத்துவமாக அவனே இருக்கிறான். இல்லை என்பவருக்கு இல்லாத அவ்வெறுவெளியாக எங்கும் நிற்பவனும் அவனே என்பதைப் புரிந்துகொண்டால் நல்லது.
மின்சாரம் நமது உபகரணத்துக்கு ஏற்ப வெப்பமாகவோ, குளிராகவோ, காற்றாகவோ, காந்தமாகவோ, நீர்பாய்ச்சும் சக்தியாகவோ மாறுகிறது. ஆனால் குறுகிய பார்வை கொண்டவர்கள் மின்சாரம் நீர்தான் பாய்ச்சும், காற்றுத்தான் வீசும் என்று தாம் அறிந்த ஒரே செயல்பாட்டுக்குள் அதை அடைக்கப் பார்க்கிறார்கள்.

பிரம்மம் என்னும் இறைத் தத்துவமும் அப்படித்தான். நிர்விகல்ப சமாதியில் உணர்ந்தவர்களுக்கு பரப்பிரம்மமாகவே எல்லாவற்றிலும் தென்படும். அல்லாதவர்க்கு அவரவர் கும்பிடும் தெய்வமாக வந்து அருள் செய்யும். நன்றி: பசும்பொன் தேவர்

Monday, December 1, 2008

MUMBAI


தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் 60 மணி நேரத்துப்பாக்கி சண்டைக்குப் பின் தீரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.இதில் ஒரேஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான்.அவன் மூலம் தாக்குதல் பிண்ணனி தெரியவந்தது.

பிடிபட்ட தீவிரவாதியின் பெயர் அஜ்மல் அமீல் கஜா.21 வயதான இவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா இயக்கத் தீவிரவாதி.இவனுடன் மேலும் 10 தீவிரவாதிகள் தாக்குதல் திட்டத்துடன் கராச்சியில் இருந்து படகு மூலம் மும்பைக்குள் ஊடுருவினார்கள்.

சிலர் கொலாபா மார்கெட் பகுதியில் வீடு எடுத்துத் தங்கினர்.சிலர் தாஜ் ஓட்ட்லில் அறை எடுத்துத் தங்கி ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் பதுக்கினர்
திட்டமிட்டபடி 29-ம் தேதி புதன் கிழமை இரவு பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தாக்குதலில் ஈடு பட்டனர்

அப்போது அஜ்மல் தமது கூட்டாளி இஸ்மாயிலுடன் எந்திரத் துப்பாக்கியுடன் வந்து மும்பை அதிரடிப் படைத் த்லைவர் ஹேமந்த் கார்க்கரே,என் கவுண்டர் ஸ்பெஸலிஸ்ட் விஜய் ச்லாஸ்கர்,மற்றொரு அதிகாரியான அசோக் காம்தே ஆகியோரைச் சுட்டுக் கொன்றான்.

பின்னர் கார்க்கேயின் குவாலிஸ் காரில் அஜ்மலும் ,இஸ்மாயுலும் தப்பினர்.”மெரைன் டிரைவ்” என்ற இடத்தில் சென்ற போது கார் நின்று விட்டது.உடனே இருவரும் எதிரே மற்றொரு காரில் வந்த மும்பை வியாபாரிகள் காரமேஷ்,ஆர்ஷா, ஆகியோரை துப்பாக்கி மினையில் மிரட்ட்டி அவர்கள்து “கோடா” காரில் தாக்குதலுக்குப் பறந்தனர்.தந்து காரை தீவிரவாதிகள் பறித்துச் சென்றது பற்றி ஆர்ஷா போலீஸூக்கு தகவல் கொடுத்தார்.

இதற்க்குள் இரண்டு தீவிரவாதிகள் தப்பியது பற்றி தெரிந்ததும் மும்பையில் உள்ள அனைத்துப் போலீஸ் நிலையங்களும் உஷார் படுத்த்ப் பட்டன.

டி.பி. மார்க் போலீஸார் சவுபாதி சர்க்கிள் அருகில் “கோடா” காரை மடக்கினர்.கார் நிற்க்காமல் சென்றதால் துப்பாக்கியால் சுட்டானர்.இதில் இரண்டு தீவிரவாதிகள் மீதும் குண்டு பாய்ந்து,இருவரும் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர்.

உடனே இரண்டு பேரையும் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு நாயர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.தீவிரவாதி இஸ்மாயில் ச்ம்பவ இடத்திலேயே பலியாகி விட்டது தெரிய வந்தது.அஜ்மலுக்கு லேசாக உயிர் இருப்பதை கண்டு பிடித்தனர்.அவனது மார்பில் குண்டு பாய்ந்து இருந்தது.ஆனால் அவன் இறந்த்தது போல் நடித்து தப்பிக்க திட்ட் மிடு இருந்தான்.

போலீஸார் உஷாராகி அவனை ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தானர்.முதலில் சிகிச்சையை ஏற்க மறுத்தான்.

அவனுடன் வந்த இஸ்மாயில் பிணத்தைக் காட்டியதும்,இனி தன்னால் தனியாக ஒன்றும் செய்யமுடியாது என்பதை அறிந்து சிகிச்சையை ஏற்றுக் கொண்டான்.

ஆபரேஷன் மூலம் அவன் மார்பில் இருந்த குண்டுகள் அகற்றப் பட்டன.உயிர் பிழைத்த அவனிடம் தீவிரவாத தடுப்புப் படையினர் விசாரணை நடத்த வந்தனர்.ஆனால் அவன் வாயை திறக்க மறுத்து விட்டான்.

பின்னர் அங்கிருந்து ரகசிய இடத்திற்க்கு கொண்டு சென்று விசாரித்த்ப் பிறகு உண்மையை கக்கிவிட்டான்.தற்போது முமொஐ போலீஸ் விசாரணைக்கு உதவியாய் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு அஜ்மல் அமீல் தான்.

நன்றி : மாலை மலர்.

மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?

குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்தது.

பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். "எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்" என்பதே அது.

பத்தாம் நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.

அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான்.

சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார்.

அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன.

உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.

அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார்.

துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.

அர்ச்சுணனை நோக்கி,"சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக" என்றார்.

அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான்.

உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. பீஷ்மரும் அதைப் பருகித் தாகம் தணிந்தார்.

மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவளது தாயால் தணிந்தது.

இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது

Monday, November 24, 2008

ஒழுக்கம்தான் கடவுள்!


தமிழ் மண்ணே வணக்கம்!

----------------------நடிகர் சிவகுமார்

யாவர்க்குமாம் இறைவதற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே
என மனித ஒழுக்கத்துக்கு இலக்கணம் வகுக்கிறது திருமந்திரம்.

உன் பங்கில் கைப்பிடியையாவது உன் எதிரில் பசியோடு இருக்கிறவனுக்குப் பகிர்ந்து கொடு என்றனர் நம் முன்னோர். தருவதற்கு எதுவும் இல்லாத சூழ்நிலையிலும் மனதார ஒரு வாழ்த்தையாவது தந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தினர் தமிழர். இந்த ஒழுக்கத்தைதான் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

ஒழுக்கமான வாழ்க்கைதான் சாதாரண ஆத்மாவை மகாத்மாவாக மாற்றியது. ஒரு தனிமனிதனின் ஒழுக்கம் ஒரு நாட்டின் தலைவிதியையே தீர்மானித்ததுதான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு. மதுவும், மாமிசமும் இல்லாமல் வாழவே முடியாது என்ற தட்பவெப்ப சூழல் உள்ள லண்டனிலும் காந்தியின் ஒழுக்கம் அவரை கண்ணிமாக வாழ வைத்தது. தான் இறக்கும்போது சட்டைப் பையில் வைத்திருந்த குறைவான சில்லறைகள்தான், தமிழகத்தின் முதல்வராக இருந்ததைவிடப் பலகோடி மக்களின் இதயத்தில் இன்னும் வாழ்கிற பெருமையைக் காமராஜருக்குப் பெற்றுத் தந்தது.

ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வும் பொது வாழ்க்கையைப் பாதிக்கும் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதும், ஆயுத உற்பத்தி பலமடங்கு அதிகரிப்பதும் மனித ஒழுக்கம் வழிதவறிப் போனதன் அடையாளம் அன்றி வேறென்ன?

விலங்கு வாழ்க்கையையும், மனித வாழ்க்கையையும் வேறுபடுத்திக் காட்டுகிற ஒழுக்கம் என்று சொல்லுக்கு நடை, முறைமை, நன்னடத்தை, உயர்ச்சி, உலகம், ஓம்பிய நெறி என்று பொருள் சொல்கிறது தமிழ்.
அக ஒழுக்கம் வந்துவிட்டால் புற ஒழுக்கம் தானாக வந்துவிடும்.உடலளவில் மட்டும் சுத்தமாக இருப்பதற்குப் பெயர் ஒழுக்கமல்ல. பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா... மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்தடா... என்கிற கண்ணதாசனின் வரிகளில் வருகிற மன ஒழுக்கம்தான் கடவுள். மிருகத்துக்கும் தெய்வத்துக்குமான இடைவெளியில் அடங்கியிருக்கிறது நம் வாழ்வு. மனம் சுத்தமாக இருந்தாலே உடலும் சுத்தமாக இருக்கும்.உடலையும் மனதையும் கெடுக்கக் கூடிய செயல்களைத் தவிர்ப்பது திடீரென ஒரு நாளில் வந்துவிடாது. அது பழக்கமாக மாற வேண்டும். பழக்கம் குணமாக மாறும். சித்திரமும் கைப் பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போலவே ஒழுக்கமும் ஒரு பழக்கமே!சிறு வயதிலிருந்தே அதை ஆரம்பிக்க வேண்டும்.

சின்ன வயதில் திருத்தப்படாத தீய ஒழுக்கம் வளர்ந்து குற்றமாக மாறுகிறது. தான் பெற்று வளர்த்த பிள்ளைகள் வளர்ந்த பிறகு தங்களைக் கவனிக்கவில்லை என்று புலம்புகிற பெற்றோர் பெரும்பாலும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை. திருடக்கூடாது என்கிற ஒழுக்கத்தின் பயனைப் புரியவைக்காமல், தின்பண்டங்களை எடுத்து ஒளித்துவைத்த வீடுகளில் நிச்சயம் ஒரு திருடன் வளர்கிறான்.வீடுகள், பள்ளிகள், கல்லுõரிகள் போன்றவற்றில் பயின்ற மனிதர்கள் வளர்ந்த பின்பு ஏன் ஒழுக்கமாக இருப்பதில்லை என்பதை நான் அடிக்கடி யோசித்துப் பார்த்திருக்கிறேன்.

எட்டு மணிப் பள்ளிக்கு உணவைக் கூட மறுத்துவிட்டு ஓடியவர்களள் வளர்ந்து பெரியவர்களானதும் முடிந்த அளவு வேலைக்குத் தாமதமாகப் போகிறார்களே ஏன்? ஒரு நாளைக்குப் பத்து மணி நேரத்துக்கும் மேல் படித்துக் கொண்டே இருந்த மாணவர்கள் படிப்பு முடிந்ததும் புத்தகம் இருக்கிற திசையைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் ஜாலியாக இருக்க விரும்புகிறார்களே! படிக்கும் போது ஆசிரியர்களின் ஒரு பார்வைக்கே விறைத்து நிற்கிற மாணவர்கள் பள்ளி, கல்லூரியை விட்டு வெளியில் போனதும், ஆசிரியர்கள் எதிரிலேயே சிகரெட் பற்றவைக்க எப்படி தைரியம் வருகிறது?

அப்பா வீட்டில் இருக்கிற நேரத்தில் ஒழுக்கமாக இருக்கிற மகன், ஸ்ட்ரைக் என்று பஸ் கண்ணாடியை கல்லெறிந்து உடைப்பது எப்படி? இதெல்லாம் ஒழுக்கத்தைப் பழக்கம் ஆக்காமல், பிள்ளைகளின் விருப்பம் ஆக்காமல் வற்புறுத்துவதால் நேர்கிற விபத்துகள்.வீடும், சமூகமும் ஒழுக்கத்தைத் திணிக்கக் கூடாது. பேச்சைப் போல மூச்சைப் போல ஒழுக்கமும் இயல்பான விஷயமாக்கப்படும்போதுதான் நிலையான பயனைத் தரும். அதற்கு போதனைகள் மட்டுமே பயன்படாது என்பது என் அனுபவம்.

நிச்சயமாக ஒழுக்கத்தை யாரும் யாருக்கும் கற்றுக் கொடுக்க முடியாது. அது தானாகக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.எப்பவும் டி.வி. பார்த்துக்கிட்டே இருக்காதே. படி! என்று வீட்டில் தாய்மார்கள் கண்டித்தால், பிள்ளைகள் கேட்பார்களா? நாள் முழுவதும் டி.வி. முன் உட்கார்ந்திருக்கிற ஒரு தாயிடம் எதைக் கற்றுக்கொள்ள முடியுமோ அதைத்தான் குழந்தையும் கற்கும்.

ஜெயிலுக்குப் போவதற்கு அவமானப் படுகிறோமே தவிர, குற்றம் செய்ததை வசதியாக மறந்துவிடுகிறோம். அவமானம் சிறைக்குச் செல்வதில் இல்லை; ஒழுக்கம் தவறுவதில்தான் இருக்கிறது. லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகச் சிக்கியவர், அவமானத்தில் தற்கொலை என்பது செய்தி. எத்தனை முறை அவர் லஞ்சம் வாங்கி இருப்பார்.... தன் கடமையின் ஒழுங்கு மீறியது அவருக்கு அவமானமாகத் தெரியவே இல்லை. ஆனால் ஒழுக்கம் தவறிய, தனது செய்கை வெளியில் தெரிந்ததும் அவமானம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. லஞ்சம் வாங்குவதற்காக அவமானப்படாமல், மாட்டிக் கொண்டதை அவமானமாகக் கருதுகிற நமது மனோபாவம்தான் நமது முதல் எதிரி.ஒழுக்கம் என்பது கெட்ட செய்கையிலிருந்து விலகி இருப்பது அல்ல; கெட்ட செய்கையைச் செய்யாமல் இருப்பதுதான்! என்றார் பெர்னாட்ஷா.

பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்போது அவன் வெறும் படிப்பாளியாக வந்தால் போதுமென்று நினைக்கிறோம். ஸ்கவுட், என்.சி.சி., என்.எஸ்.எஸ். போன்ற வாழ்க்கையின் புற ஒழுக்கங்களைக் கற்றுத் தருகிற அமைப்புகளில் தன் பிள்ளைகள் மறந்தும் சேர்ந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள். அந்த அமைப்புகளில் சேர்ந்து டிசிப்ளின் கற்றுக் கொள்கிற நேரத்தில் இரண்டு டியூஷன் சென்றால் அதிக மார்க் வாங்க முடியுமே என்று எண்ணுகிறார்கள். படிப்பு அறிவைத் தருமே தவிர ஒழுக்கத்தைத் தராது.கடவுளை நேசிப்பதே உண்மையான பக்தி. கடவுளுக்குப் பயப்படுவது அல்ல. அதே போல, ஒழுக்கமும் விருப்பம் சார்ந்தது. பயத்தால் ஒழுக்கம் வராது.

அப்படிப் பார்த்தால்

ஒழுக்கம்தான் கடவுள்!

 

 

 

அமெரிக்கா முதலில் நிலவில் கால் வைத்தது நிஜமா?


அமெரிக்காவின் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா-National Aeronautics and Space Administration (NASA).நம்மூரின் ISRO போல. 1958-ல் தான் நிறுவப்பட்டது.ஜூலை 1969-ல் அப்பொல்லோ 11 வழி நிலவுக்கே ஆள் அனுப்பிவிட்டார்கள்.பின்னர் இது ஒரு சுத்த கதை என ஒரு சாரார் கூற நாசா அதை மறுத்து தலையில் சத்தியம் அடித்து உண்மையென்று கூறிவருகிறது. இன்றைய அளவில் நாஸாவின் வருடாந்திர பட்ஜெட் ஏறக்குறைய 17 பில்லியன் டாலர்கள்.

Friday, November 21, 2008

பண்ணாரி செல்லும் போது


Àñ½¡Ã¢ ¦ºøÖõ ÅƢ¢ø

கார்த்திகை தீபம்வீட்டில் கார்த்திகை தீப வழிபாட்டில்.....

குழநதைகள் .. ஹர்சவர்த்தன், சுமதி மற்றும் பிரணவ்