ADS

AD

Saturday, March 28, 2009

கருணாநிதிக்காக ராஜாத்தி அம்மாள் ஹோமம்


News from that’s tamil

கும்பகோணம்: முதல்வர் கருணாநிதி நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் திருக்கடையூர் கோவிலில் ஆயில்ய ஹோமம் செய்தார்.

கருணாநிதி மதம், சாதி, ஆன்மீகம் போன்ற நம்பிக்கையில் மாறுபட்ட கருத்து கொண்டவர். பெரியார் வழியில் நடப்பதாக அடிக்கடி பெருமையாக கூறிக் கொள்வார்.

இந்துக் கடவுள்கள் குறித்து அவர் முன்பு பேசியவை இன்றும் கூட விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அவரும் தனது விமர்சனங்களை நிறுத்தியதில்லை.

இந்த நிலையில் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் கும்பகோணம் அருகில் உள்ள திருக்கடையூர் அமிர்தகேடஸ்வர் கோயிலுக்கு திடீரன வந்தார்.

அங்கு முதல்வர் கருணாநிதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி ஆயில்ய ஹோமம் கோவில் நந்தி மண்டபத்தில் விஸ்வநாத குருக்கள் தலைமையில் நடத்தப்பட்டது.

துணைவியார் ராஜாத்தி பெயரில் ஹோமம் நடந்தது. இரவு 7.30 மணியளவில் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஆயில்ய ஹோம பிரசாதத்தை ராஜாத்தி பெற்றுக் கொண்டார்.

அடுத்து எதிரிகளை வீழ்த்தும் வகையில் கும்பகோணம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யாவாடி பத்ரகாளிஅம்மன் கோயிலிலும் விசேஷ பூசைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதாம்.

அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 60 வயது முடிந்தவர்களுக்கு சஷ்டியப்த பூஜை, 70 வயது முடித்தவர்களுக்கு பீமரத சாந்தி, 80 வயதுக்கு சதாபிஷேகம் மற்றும் நீண்ட கால ஆயுள் வேண்டி ஆயில்ய ஹோமம் நடத்தப்படுது வழக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

User Comments

பதிவு செய்தவர்: eyefather பதிவு செய்தது: 28 Mar 2009 11:50 am

uyarthiru muthalvarukku, வணக்கம்.

நீங்கள் ஒரு பகுத்தறிவு கடல். ஏன் உங்கள் மீது ஆயுள் ஹோமம் ? உங்கள் Thiramaiikku ஓர் தகுதிக்கு நம்பிக்கையில்லையா?

பதிவு செய்தவர்: Raman பதிவு செய்தது: 28 Mar 2009 10:09 am

சொல்வது ஓன்று, செய்வதோ மற்றொன்று -- பேஷ் பேஷ்! கேட்கவே ரொம்ப நல்ல இருக்கு! பிராமணர்களையும் பிராமணீயத்தையும் கேவலமாக பேசிவிட்டு இப்போது பிராமணர்களின் வழிபாட்டு முறையை பின்பற்றுவது கழகங்களே பிராமணீயத்தை ஒப்புகொண்டதுக்கு சமம். மேலும் இதுவரை பேசியது அனைத்தும் பொய் என்பதிற்கு அத்தாட்சி இது. இனிமேலும் இந்த பொய் பேசும் முகவின் இந்து எதிர்ப்பு பேச்சுக்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் என்ற முதுமொழி உண்மை ஆகிவருகின்றது
.

பதிவு செய்தவர்: கண்மணி பதிவு செய்தது: 28 Mar 2009 09:08 am

ஹோமம் நைவேத்தியம் இது எல்லாம் கை கொடுக்குங்குளா அம்மா? பேசமா கட்சியை அதிமுகவோட இணைத்து விட்டால் போதும் முங்கிய திமுக மேல் எழுந்து விடும். தலைவர் 2 வருசம் சிஎம். அம்மா 2 வருசம் சிஎம் நம்ம இளம் கட்டிளம் காளை ஸ்டாலின் 1 வருசம்.. என்ன சொல்லிறீங்க. நம்ம பாலு அண்ணாச்சியை ஒரு அறிக்ககை விடசொல்லுங்க வெள்ளம் தலைக்குமேல் போகுது ஜான் போனால் என்ன மொளம் போனால் என்ன?

பதிவு செய்தவர்: வீரசிகாமணிக்காரன் பதிவு செய்தது: 27 Mar 2009 05:43 pm

பகுத்தறிவுக் கொள்கை கழகக் கண்மணிகளுக்குத் தான் பொருந்துமே தவிர மற்றவர்களுக்கு அல்ல. ஆகவே இவர் துணைவியார் செய்தது சரி என்றோ?, இது அத்தனையும் எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்றோ?, ஏற்க்கனவே புட்டப்பர்த்தி சாயி பாபா ஒருமுறை வீட்டிற்கு வந்தபோது இப்படி ஒரு பூஜையை யாருக்கும் தெரியாமல் செய்யச் சொன்னார் அதைத் தான் பகுத்தறிவு வழி நிறு செய்திருக்கிறார்கள் என்றோ?, நாளை கேள்வி-பதில் பாணி அறிக்கை வந்தால் ஆச்சரியம் இல்லை


Sunday, March 15, 2009

தேர்தல் கூட்டணி பந்தயத்தில் பாரதிய ஜனதாக் கட்சி முந்தியது


தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. பகைமை மறந்து பல கட்சிகள் ஒன்று சேர்கின்றன. பழைய கள் புளித்ததுபோல் பழைய நட்பு பிடிக்காமல் பல மாநிலங்களில் கட்சிகள் பிரிந்து போகின்றன. பெரிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகள் கூட்டணி என்ற இடியாப்ப சிக்கலில் இருந்து மீள்வதற்கு முடிந்தவரை மாநில கட்சிகளின் தேவைகளுக்கு ஆமாம் சாமி போட்டு நிலமையை சீர் செய்து வருகின்ன.

இந்த போட்டியில் பாரதிய ஜனதா முதலிடம் வகிக்கிறது. பாரதிய ஜனதாவின் ஆரம்பமே சிக்கலில் துவங்கியது. ஒரிசாவில் 10 வருட நண்பனான பி.ஜு. ஜனதா தள் கூட்டணியில் முரண்டு பிடிக்க, இதற்கு ஆட்பட்டால் மற்ற மாநில கட்சிகளும் ஒரிசாவையே சாக்காக வைத்து தொந்தரவு தரும் என்று நினைத்து புதிய பார்முலாவை செய்து பார்த்தது. ஆதாவது அதிரடியாகக் கூட்டணியை முறித்தது மட்டுமல்லாமல், தற்போது நடந்து வரும் பட் நாயக் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கி கொண்டது. இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த பட் நாயக் முடிவில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவால் ஆட்சியை தக்க வைத்து கொண்டார். இந்த விமோசனத்திற்கு நன்றிக்கடனாக மூன்றாவது அணியில் மத்திய இந்தியாவில் இருந்து முக்கிய பங்கு வகிப்பதாக கூறிவிட்டார்.  பாரதிய ஜனதாவின் இந்த அதிரடி பார்மூலா வெற்றி பெற்றது என்றே கூறலாம். கடந்த வாரம் வரை முரண்டு பிடித்து வந்த மாராட்டிய மாநில சிவசேனா 26/22 என்ற கூட்டணிக்கு ஒத்துக்கொண்டது. சிவ சேனாவின் இந்த நடவடிக்கைக்கு காரணமும் உண்டு. ஒரு புறம் சரத் பவார் சிவசேனாவில் இருந்து பிரிந்த ராஜ் தாக்கரேவின் நவ நிர்மான் சேனாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. மும்பை கொங்கான பிரதேசம், வடக்கு மாவட்டங்களில் இளைய தலைமுறையினரின் மத்தியில் நல்ல மதிப்பு உள்ள நவநிர்மான் சேனாவுடன் ரகசிய கூட்டு வைக்கும் சமயங்களில் இது சிவசேனாவிற்கு கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சிவசேனா மறுபதில் சொல்லாமல் தனது கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது.  மராட்டியத்தை அடுத்து பிகாரிலும் கூட்டணி பிரச்சனையின்றி ஓகே ஆனது. அங்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதால் பாரதிய ஜனதாவுடன் சுமூகமாக செல்வதே நன்றாகப்பட்டது இதனை அடுத்து தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை உடனடியாக முடிந்தது. பாரதிய ஜனதாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் பிற மாநிலங்களிலும் கூட்டணி விரைவாக அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் வாரங்களில் மும்பையில் மராட்டிய மாநில  வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.

thanks to adhilaalai.com

Thursday, March 5, 2009

ப்ராப்தம் என்றால்? - ஸ்வாமி ஓம்கார்

ப்ராப்தம்

- உங்களுக்காக பிறந்தவர்

ஸ்வாமி ஓம்கார்

தற்காலத்தில் சாபக்கேடு என எதை சொல்லலாம்? 

1) இளமையில் வறுமை?
2) கொடிய நோய்?
3) ஊனம்?

இல்லை. இல்லை. இதைக்காட்டிலும் அதிக துன்பம் கொடுப்பது எது தெரியுமா?

உங்களுக்கு திருமண வயதில் மகனோ/மகளோ இருந்தால் இதை விட கொடுமை வேறு இல்லை. இவ்வளவு தாழ்த்தி கூற காரணம் என்ன? இக்கால ஜோதிடர்களின் சர்வதிகாரத்திற்கு அடிமைப்பட்டு "ஜாதக பொருத்தம்" என்னும் சிறையில் தண்டனையை அனுபவிக்கிறார்கள். ஒருவர் தன் மகளின் ஜாதகத்தை கையில் எடுத்தால் அவரும் அவரின் குடுப்பத்தாரும் மன அளவில் துன்பப்பட்டு கலங்கும் வரை இவர்கள் விடுவதில்லை.
 

"தோஷ ஜாதகம்" இதனால் உங்கள் பையனுக்கு ஜாதகம் அமையாது என்று தந்தை அவதிப்படுவதும், மறுபுறம் "சுத்த ஜாதகம்" இதற்கும் ஜாதகம் அமையாது என கூறுவதை கேள்விப்படுகிறோம். ஆக ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்? சுத்தமாகவா - அசுத்தமாகவா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருக்கு இருக்கும் ஜாதகம் மற்றொருவருக்கு இருக்காது என்பது விதி. இதன் அடிப்படியில் பார்த்தால் இரு ஜாதகத்தை ஒப்பிட்டு பார்த்து இது சுத்தம் - இது தோஷம் என சொல்ல முடியாது. கடவுள் அனைவரையும் ஓர் தனித்தன்மையில் படைக்கிறார். உங்களுக்கு இருக்கும் குடும்பம்-குழந்தைகள்- தொழில் இவை உலகில் வேறு ஏதேனும் பகுதியில் உள்ள ஒருவருக்கும் இதே போன்று இருக்கிறது என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இருக்க முடியாது. 

உங்கள் மனதை போன்ற மென்மையான மலரை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லா மலரும் பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும் , அந்த செடியின் வேறு வேறு பாகத்தில் மலர்கிறது. இதை போன்ற தெய்வீக படைப்பான நீங்கள், பார்ப்பதற்கு ஒரே இனமானாலும் உங்கள் பிறப்பின் நோக்கம் வேறாகும்.

இவ்வாறு இருக்க உங்களை மற்றொருவரின் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி தோஷமானவர், யோகமானவர் என சொல்ல முடியுமா? 

திருமணம் என்று வரன் பார்க்க துவங்கியதுமே, செவ்வாய் தோஷம் , நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் என ஜாதகத்தை இழிவு படுத்துவதும், உங்கள் ஜாதகம் சுத்த ஜாதகம் அவ்வளவு சீக்கிரம் மற்றொரு ஜாதகத்துடன் சேராது என சொல்லுவதும் முட்டாள்தனமானது.

20 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்தவர்களை நீங்கள் கேட்டுப்பாருங்கள்- அவர்களுக்கு இவை புதுசு. அவர்கள் ஜாதகபொருத்தம் பார்த்தா திருமணம் செய்தார்கள் என கேட்டால் இல்லை என்றே பதில் வரும்.

ஜோதிட சாஸ்திரத்தில் பத்து பொருத்தம் பார்ப்பது என்பது கிடையாது. நவீன காலத்தில் சில ஜோதிடர்கள் தங்கள் வருமானத்திற்காக ஏற்படுத்திய விஷயம் பலரின் வாழ்க்கையில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஒரு நிமிடத்தில் பொருத்தம் பார்க்கலாம் எனும் புத்தகம் வேறு பிளட்பாரம் வரை
 விற்கப்படுகிறது. ஒரு நிமிடத்தில் பொருத்தம் பார்த்து வாழ்க்கை முழுவதும் துன்பம் அடைவது நல்லதா?

பின்பு எப்படித்தான் திருமணத்தை முடிவுசெய்வது? ப்ராப்தம் என்பதை பார்த்தால் மட்டுமே இதற்கு தீர்வுண்டு. 

ப்ராப்தம் என்றால்?

" ப்ராப்தம் " இந்த வார்த்தையே உங்களுக்கு பல விஷயத்தை சொல்லும். முடிவு செய்யபட்ட ஒன்று அல்லது விதிக்கப்பட ஒன்று என சொல்லலாம். உங்களுக்கு முடிவு செய்யப்பட்ட வாழ்க்கை துணைவர் இவர்தான் என துல்லியமாக சொல்லும் முறையே ப்ராப்தம்.

பெண் ஜாதகத்தில் உள்ள சந்திரனின் ராசி/நட்சத்திரம், லக்னத்தின் ராசி /நட்சத்திரம் மற்றும் ஜாதகர் பிறந்த கிழமையின் அதிபதி , ஆண் ஜாதகத்தில் நடப்பு தசா-புக்தி -அந்திரம் இவற்றுடன் இணைந்தால் ப்ராப்தம் உண்டு.இதில் ஒரு கிரகம் இல்லை என்றாலும் ப்ராப்தம் இல்லை. 

இது போன்ற இணைப்பு அனைத்து ஜாதகத்துடனும் இருக்காது. ஜாதகி யாரை திருமணம் செய்ய போகிறார்களோ அவர்களுடன் மட்டுமே இருக்கும். 

திருமணத்திற்கு மட்டும் இல்லாமல், தந்தை-மகன் , சகோதர- சகோதரி மற்றும் வியாபார கூட்டாளி என வாழ்க்கையில் மற்றொருவருடன் இணையும் தருணத்தில் ப்ராப்தம் இருந்தால் மட்டுமே முடியும். கடவுள் உலகில் அனைவரையும் ஓர் சட்டதிட்டத்தில் இணைத்திருக்கிறார்- அவரின் அனுமதி இல்லை என்றால் எதுவும் நடக்காது என ப்ராப்தத்தை அறிந்தவர்களுக்கே தெரியும்.

ரமணமகரிஷியின் அமுத மொழியை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்,

"அவரவர் ப்ராப்த பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்.
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது.
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது.
இதுவே திண்ணம்.
ஆதலின் மௌனமாயிருக்கை நன்று"


திருமணத்திற்கு மட்டுமல்லாமல் வாழ்க்கை முழுவதும் ப்ராப்தத்தின் விளையாட்டை இவரைவிட வேறு யார் தெளிவுபடுத்த முடியும்? உங்கள் ஒவ்வொரு செயலிலும் இதை மனதில் கொண்டு செயல்படுத்தி உங்கள் வாழ்க்கை வளமடைய வாழ்த்துகிறேன்.

மேலும் இது போன்ற அரிய விஷயங்களை அறிய http://vediceye.blogspot.com செல்லுங்கள்