பிரபல பேச்சாளர் ஒருமுறை 200 பேர் கொண்ட கருத்தரங்கத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் தன்னிடமிருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை கையில் உயர்த்தியவாறு " இந்த நோட்டு யாருக்கு வேண்டும்?" என் வினவினார். கூட்டத்தினர் கைகளை மேலே உயர்த்தினர்.
"உங்களில் ஒருவருக்குத்தான் இந்த பணத்தை தரப்போகிறேன் " என்றவர் கொஞ்சம் பொறுங்கள் என்றவாறே கையில் இருந்த நோட்டை கசக்கியபின் "இன்னும் இதை விரும்புவோர் உண்டா" எனக்கேட்டார். மீண்டும் அனத்து கைகளும் மேலே உயர்ந்தன.
"நல்லது" என்று சொல்லி அந்த பணத்தை தரையில் போட்டு தனது பூட்ஸ் காலால் நசுக்கி அதை கையில் எடுத்து மீண்டும் கேட்டார் "தற்போது வேண்டுமா?" இன்னும் உயர்ந்தன கைகள்.
அவர் சொன்னார். "நண்பர்களே.. இன்று ஒரு மதிப்பு மிக்க பாடத்தைக் கற்றுக்கொண்டீர்கள். நான் இந்த ஐநூறு ரூபாய் நோட்டை கசக்கினாலும், கீழே போட்டு மிதித்தாலும் அந்த நோட்டை விரும்பினீர்கள்... காரணம் அது என்ன செய்தாலும் அதன் மதிப்பை இழக்கவில்லை. அது ஐநூறு ரூபாய் ஆகத்தான் இருந்தது.
இது போலவே நமது வாழ்க்கையிலும் நாம் கீழே விழுகிறோம்... கசக்கப்படுகிறோம்... மிதிபடுகிறோம்... நாம் எடுக்கும் சில முடிவுகள் நமக்கு சாதகமானதாக இல்லாத சந்தர்ப்பமாகிவிடுகிறது.
ஆகவே நாம் எதற்கும் லாயக்கற்றவர்கள் என் இருந்து விடுகிறோம்.
ஆனால் அப்படியல்ல.
நாம் நமது மதிப்பை என்றும் இழப்பதில்லை.
எந்த சூழ்நிலையிலும்...
நமக்கென்று தனி மதிப்பு உள்ளது
நன்றி. திரு, இராம ராமநாதன் அவர்கள்... பாரத் ரி இன்ஸூரன்ஸ்... கோவை.
No comments:
Post a Comment