ADS

AD

Wednesday, June 24, 2009

கண் குருடாகும் வர்ண வீடு


தமிழ் நாட்டில் சில பழக்கம் மக்களிடையே பரவி வருகிறது. அதில் முக்கியமானது கண்களை பறிக்கும் அளவுக்கு வீட்டிற்கு கலர் அடிப்பது. சாலையில் செல்லும்பொழுது திடீரென அந்த வீடுகளை பார்த்தால் கண் பறிபோகும். 

ஆரஞ்சு,பச்சை, மஞ்சள் என ஃப்ளோரசெண்ட் கலரில் வீட்டுக்கு வர்ணம் பூசுகிறார்கள். இங்கிலீஷ் கலர் என பெயரில் பிரிட்டன் மக்களின் நாகரீகம் என்ற பெயரில் பூசினாலும், பிட்டனில் மக்க்ள் இவ்வளவு மோசமான வண்ண கலவையை தேர்ந்தெடுப்ப்பர்களா என சந்தேகம். வீட்டின் வெளிப்பகுதியில் ஒன்றுக்கு மேட்பட்ட வண்ணம் பூசும்பொழுது கண்களுக்கு ஒருவித தடுமாற்றமும், வயிற்றை பிசையும் ஒரு உணர்வும் ஏற்படுகிறது.

இந்த ந(ச)வநாகரீகத்தை பற்றி விசாரித்தால் அது 'வாஸ்து' குறைக்காக பூசுவதாக சொன்னார்கள். வாஸ்து குறையால் வீட்டை இடிக்க தயங்கும் சிலர் வாஸ்து தோஷம் போக்க இவ்வாறு பூசுகிறார்களாம். பிறரின் திருஷ்டி படாமல் இது தடுக்குமாம். ஐயா உங்களால் பிறருக்கு திருஷ்டியே இருக்காதே?

நம் நாட்டில் சுண்ணாமை அதிகமாக வண்ணம் பூச பயன்படுத்தினார்கள். வெண் நிறத்திற்கும், சுண்ணாம்பு காற்றில் வேதி வினை நிகழ்த்துவதாலும் அதில் வாழ்பவருக்கு நன்மை ஏற்படும். காரணம் வெண் நிறத்தில் எல்லா நிறமும் உண்டு. அங்கே யார் வாழ்ந்தாலும் அவருக்கு உண்டான நிறம் அதில் இருப்பதால் அனைவருக்கும் நன்மை ஏற்படும்.

இதை எல்லாம் புரிந்து கொள்ளாத இவர்களுக்கு வாஸ்துவில் மட்டும் குறை இருப்பதாக தெரியவில்லை..!

Saturday, June 20, 2009

பெண் சிசுக்கொலைகளுக்கு வித்திடாதீர்கள்




ஏதோ ஒரு நூற்பாலையில்  காசோலைகள் திரும்பிவிட்டன அல்லது பணம் கொடுக்கவில்லை என்று சொல்லி ஒட்டு மொத்த ஜவுளி ஆலைகளையே அந்த பார்வை பார்ப்பது சில பத்திரிக்கைகள் மட்டுமே செய்து வந்தன. ஏனோ தற்போது தினமணியும் அந்த அளவுக்கு கீழே இறங்கி விட்டது. அதாவது இது சுமங்கலித்திட்டம் என்கிறார்களே அது எங்கேயும் கிடையாது. இதெல்லாம் பத்திரிகைகளும் சில தொழிற்சங்கங்களும் கண்டுபிடித்த வார்த்தை.

 

எங்கோ ஒரு குக்கிராமத்தில் படிக்க இயலாத பெண்களை அழைத்து வந்து ஆலைகளில் வேலைக்கு சேர்ப்பது ஒவ்வொரு பெண்ணின் பெற்றோர்களே. அவர்கள் ஒன்றும் தமது பெண்குழந்தைகளை பணம் பெற்றுக்கொண்டு கொத்தடிமைகளாக விட்டுச்செல்வதில்லை. வருகிறார்கள். ஆலையைப்பார்க்கிறார்கள். அங்குள்ள சக தொழிலாளர்களிடம் பலமுறை விசாரிக்கிறார்கள். அதற்கப்புறம் தான் தனது பெண்குழந்தகளை விட்டுசெல்கிறார்கள்.

 

எங்கோ தென்மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் தினமும் கோவை வந்து ஆலை வேலை செய்து கொண்டு தினமும் தன் வீட்டுக்கு  திரும்பிச்செல்ல முடியாது. ஆகவே தான் அவர்கள் ஒரு குழுவாக வந்து ஆலைப்பணி செய்ய வருகிறார்கள். இப்படி வரும் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகம் உறைவிட வசதி செய்து தருவதில் என்ன தவறு இருக்கிறது? அவர்களுக்கு உணவு வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் தினசரி பெறும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு அவர்கள் கைச்செலவுக்கு போக மீதம் இருப்பதை ஒருவருடம் கழித்தோ, இரண்டு வருடம் கழித்தோமூன்று வருடம் கழித்தோ தரும்போது அது 30000 அல்லது 40000 ஆகப்பெருகித்தான் இருக்கும்.

 

இதற்கு மேலும் அவர்கள் பணிபுரிந்தாலும் இதே நிலைதான். அவர்கள் தொடர்ந்து பணிபுரிய விருப்பப்பட்டால் ஆலை நிர்வாகங்கள் அவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக ஆக்க தயங்குவதில்லை. ஆனால் அவர்கள் எங்கோ ஒரு கிராமத்திலிருந்து வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட அளவு சேமிப்பு கிடைத்ததும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திருமணம் செய்துகொண்டு தங்கள் வாழ்க்கையைத் துவங்குகிறார்கள்.

 

இப்படியெல்லாம் வாழ்வாதாரம் இருப்பதால் தான் இப்போது பெண்சிசுக்கொலைகளே இல்லை என்ற நிலை வந்திருப்பதை யாரேனும் மறுக்க முடியமா?

 

குறந்தபட்சம் பத்தாம் வகுப்பு பரை படித்திருப்பவர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற நிலை இருப்பதால் இப்போதெல்லாம் பெண்குழந்தைகளின் கல்வியறிவு சதவீதம் அதிகரித்திருப்பதை யாரும் மறுக்க முடியுமா?

 

பள்ளிப்படிப்பு முடித்ததும் மேற்கொண்டு படிக்க முடியாமல் எத்தனை பெற்றோர்கள் கஷ்டப்படுகிறார்கள்

 தெரியுமா?

 

அந்த பெண் குழந்தைகளை திருமணம் ஆகும் வரைக்கும் வீட்டில் வைத்துக்கொண்டு மடியில் நெருப்பைக் கட்டியவாறு இருந்த நிலை இப்போது இல்லையே.  காரணம் இந்த ஆலை வேலை தான்.

 

இவர்களுக்கு நியாயமான ஊதியம், சுகாதாரமான தங்குமிடம், போதிய ஓய்வு, விபத்து மற்றும் நோய்க்கான செலவுத்தொகை ஆகியவற்றை எல்லா ஆலைகளுமே இலவசமாக போட்டி போட்டுக்கொண்டு வழங்குகின்றன. ஏனென்றால் ஆட்கள் கிடைப்பது அவ்வளவு அரிதாக உள்ளது.



இங்கு ஆலையில் உள்ள நேரம் போக அவர்களுக்கு இலவசமாக யோகா, தையல் பயிற்சி, கூடை பின்னுதல் போன்ற கைத்தொழில்களும் நிறைய ஆலைகளில் கற்றுத்தரப்படுகிறது. இவற்றையெல்லாம் அவர்கள் கிராமத்தில் நினைத்துப்பார்க்ககூட முடியாது. அவர்கள் திருமணத்திற்குப்பின்னும் இதனால் பயன் பெறுகிறார்கள். இங்கு வந்து சுகாதாரமாக இருந்து பழகி விடுகின்றார்கள். அவர்களது கிராமத்து வாழ்க்கைமுறையை இங்கு வந்து மாற்றிக்கொண்டு இவர்கள் பண்பட்டு செல்கிறார்கள். அவர்களது நடை உடை பாவனைகளே மாறி ஒரு புதுப்பொலிவுடன் இருப்பதை பார்த்து செல்வதை அவர்களது பெற்றோர் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்கள்.

 

இப்படி நிலை இருக்க ஏதோ ஒரு சம்பவத்தைகாட்டி ஒட்டுமொத்த ஆலைகளையும் எடைபோடுவதை பத்திரிக்கைகள் நிறுத்தவேண்டும்.

 

ஏதோ ஒரு இடத்தில் நடப்பதைவைத்து அனைவரையும் அந்த லிஸ்டில் சேர்க்காதீர்கள்.

 

ஏதோ ஒரு பத்திரிக்கை மஞ்சள் பத்திரிக்கயாக இருப்பதை வைத்துக்கொண்டு நாங்கள் அனைத்துப் பத்திரிக்கைகளையும் மஞ்சள் பத்திரிக்கைகள் என விமர்சனம் செய்வதில்லயே?

 

இந்த சுரண்டுதல், ரத்தத்தை உறுஞ்சுதல், என்கின்ற ஹைதர் கால பல்லவி பாடுவதை விட்டொழியுங்கள்.

 

பத்திரிக்கைகளும், மீடியாக்களும் தங்களது நிருபர்களை ஒவ்வொரு அரசு அலுவலகத்துக்கு அனுப்புங்கள். அங்கே பாமரன் படும் பாட்டை கேளுங்கள். சான்றிதழ்களுக்காக திரும்பத்திரும்ப ஒரே அலுவலகத்துக்கு மாறி மாறி அலையும் அவல நிலையை பாருங்கள். லஞ்சம் வாங்கும் பேய்களை விரட்டுங்கள். அந்த அதிகாரிகளின் தோலை உரியுங்கள்.

 

அதைவிட்டு இப்படியெல்லாம் எழுதி ஏழைப்பெண்களின் வேலை வாய்ப்பினில் மண்ணைத்தூவாதீர்கள். நேராகச் செல்லுங்கள். ஆலையில் பணிபுரியும் பெண்களைக் கேளுங்கள் ஏதாவது தவறு இருந்தால் ஆலை நிர்வாகத்திடம் சொல்லி நல்லது செய்யப்பாருங்கள்.

 

மறுபடியும் பெண் சிசுக்கொலைகளுக்கு வித்திடாதீர்கள்

Monday, June 1, 2009

கைநிறைய சம்பளம்.....கை நீட்டுதல் குறையுமா?

எதிர்பார்த்தது போலவே அரசு ஊழியர்கள் சம்பளம் அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது...

 

ஒரு சத்துணவு ஊழியரின் சம்பளம் அரசு மருத்துவமனையில் ஐந்து ஆண்டு காலம் சிறப்பாகப் படித்து பயிற்சி மருத்துவராக இருப்பவரின் சம்பளத்தைக் காட்டிலும் ஏறத்தாழ இரண்டு மடங்காக இருக்கலாம்.....

 

அரசு மருத்துவர்கள் தேர்தல் பணிக்கா செல்லப் போகிறார்கள்...

பின் அவர்களுக்கு எதற்கு சம்பள உயர்வெல்லாம்......?

 

சரி... சந்தோசப்படுவோம்....

ஆனால் இனிமேலாவது இந்த வருவாய் அலுவலகம், வணிகவரி அலுவலகம், காவல்துறை இவற்றில் பணிபுரிவோர் (ஒரு சிலர் தவிர)கை நீட்டாமல் இருப்பார்களா...?

 

இல்லை …. இந்த சம்பள உயர்வு போதாதென்று இன்னும் லஞ்சம் கேட்பார்களா...

 

ஆண்டவனுக்கே ( ஆள்பவர்க்கே) வெளிச்சம்...