ADS

AD

Saturday, January 5, 2013

கோவையிடம் சென்னை கேட்டது நீ செளக்கியமா


ஐவகை நிலங்களை அந்நாளில் அறிந்தோம்
ஆறாம் நிலத்தினை இந்நாளில் அறிந்தோம் 
கோவை - இருளும் இருள் சார்ந்த நிலமும் 

நாத்திகன் கூட இங்கு ஆத்திகனாகிறான்
மின்சாரம் எப்போது வரும் என்று ஆதங்கப்படுகிறான் 

"கைத்தான்" விசிறியினை காலமெல்லாம் கொண்டவனும்
கை தான் விசிறியெனும் கொள்கைக்கு மாறுகிறான்
கோவையில் பிறக்கும் குழந்தைகள் பலவும் இப்போது அழுவதில்லையாம்
கருவறைக்கும் கோவைக்கும் வேற்றுமையில்லாத‌தால் 

மாலைப்பொழுது சாயும்போது மின்விளக்குகள் அணையும்போதுபெண்குலத்தின் கழுத்தில் உள்ள பொன்மாலையைஅறுத்துச் செல்லும் களவுகளால்தான்,
அந்தப்பொழுதிற்கு பொன்மாலைப்பொழுது என வந்ததோ? 

இன்றிருந்தால் பாரதி இப்படி பாடியிருப்பான்..
"யாமறிந்த நகர்களிலே கோவையைப்போல இருளானதெங்கும் காணோம்" 

வள்ளுவனின் வாக்கும் வந்திருக்கும் இப்படி
"சென்னையிலே வாழ்வாரே வாழ்வார் மற்று
எல்லோரும் இருளிலே ஆழ்ந்துழல்வார்" 

கண்ணதாசனும் இப்படி கவிதை புனைந்திருப்பான்
"கோவையிடம் சென்னை கேட்டது நீ செளக்கியமா"
"யாரும் உன்னிடத்தால் இருந்தால் செளக்கியமே" 
கோவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

 இரவு நேரங்களில் மின்சாரம் வருவதில்லை
இசைமுழக்கத்தோடு வரும் கொசுக்களின் ஊர்வலம். 

கொசுக்களை விரட்ட "ஆல் அவுட்டை" நாடினால்
அதுவேலை செய்வதில்லை 
மின்சாரம் இன்மையால் கோவையில் இன்று 
சிறுதொழில் அனைத்தும் "ஆல் அவுட்"
உழைப்பால் உயர்ந்த நகரம் இன்று பிழைக்க கேள்விக்குறியானது. 
ஒரு தொழில் நகரம் இன்று இருள் நகராயிற்று
துயர் நகராயிற்று

Thanks to:EED (Equitable Electricity Distribution) CBE