ADS

AD

Saturday, April 25, 2009

ஹிட்லர் மறு அவதாரம்.............
















இந்த படங்களைப்பாருங்கள்

 ஸ்ரீலங்காவில் நடப்பது என்ன ?


இலங்கை ராணுவம் மக்கள் குடியிருப்பில்  வெடி குண்டு போட்ட பின்...


இந்தப் பிஞ்சுக்குழந்தை  இவர்களை என்ன செய்தது?


இவை தமிழ் பேசும் குழந்தைகள், அதுதான் இலங்கை ராணுவத்திற்குப்பிடிக்கவில்லை.  ஆகவே தான் இந்தக்கொலை...

  இது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதா...?

  இவற்றை எந்த இந்தியப்பத்திரிக்கைகளாகட்டும், உலகப்பத்திரிக்கைகளாகட்டும் யாரும் வெளியிடுவதில்லை.

  இது ஜனவரி 2009ல் இலங்கை மூங்கிலாறு பகுதியில் மக்கள் மீது தொடுத்த தாக்குதல்



ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டன... இதை கேள்வி கேட்க யார் உள்ளார்?

 இதோ இந்த குழந்தை செய்தது என்ன?


செய்த ஒரேதவறு தமிழினத்தைசார்ந்தது மட்டுமே.

 இதோ இந்த கர்ப்பிணிப்பெண் இரக்கமின்றி கொல்லப்பட்டதைப்பாருங்கள்...


இது உலகின் மிக ஈவு இரக்கமின்றி செய்யப்பட்ட தாக்குதல். கூட எட்டு மாத கருவும் சேர்ந்து கொல்லப்பட்டதே..

 சேய் அந்தப்பெண்ணின் உடல் மீது... பிணமாக....

 இதோ 13 வயது பள்ளி மாணவன்...


எங்கே அந்தக்குழந்தையின் தலை...?

 ஐ.நா.சபையால் என்ன பயன்..?

 

900 குழந்தைகள் உட்பட 3812 ஏதும் அறியா அப்பாவித்தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தால் கடந்த மூன்று மாத காலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

 ஐ.நா. அறிக்கையின்படி தினமும் 42 தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள்.

 

இலங்கை அரசு வன்னிப்பகுதிக்கு எந்த செய்தியாளர்களையும் அனுமதிப்பதில்லை.


அனைத்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன..

துணை போகின்ற இந்திய அரசியல் வாதிகள் யாராய் இருப்பினும்


காலம் கண்டிப்பாக உங்களை சும்மாவிடாது.....


கலைஞர் தந்தி அடிப்பதை தவிர வேறு என்ன செய்யலாம் ...?

 

- பாஸ்கரன் சுப்ரமணியன்

லங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு 2 முறை தந்தி அடித்தார் நமது தமிழின தலைவர் அவர்கள்.

அவருக்காக கோரிக்கை அனுப்ப சில பல எளிய வழிகள்...

 

(1) குடும்பத்துடன் நடை பயணமாக டெல்லி சென்று மனு கொடுக்க போவதாக அறிவிக்கலாம். (வருட கணக்கில் பிரச்னையை இழுக்க சிறந்த வழி)

 

(2) அமைச்சர்களுடன் சைக்கிள் பயணமாக டெல்லி சென்று மனு கொடுக்க போவதாக கூறலாம்.

 

(3) மாட்டு வண்டி கட்டிக்கொண்டு டெல்லி செல்ல இருப்பதாக கூறலாம்.

 

(4) புறா வழி தூது அனுப்ப எண்ணுவதாக செய்தி வெளியிடலாம்.

 

(5) நுங்கு வண்டி செய்து அதனை உருட்டிய படி செல்வதாக கூறலாம்.

 

(6) சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மராத்தான் ஓட்டம் டெல்லி வரை ஓட இருப்பதாக கூறலாம்.

 

(7) தங்க நாற்கர சாலையில் சைக்கிள் டயர் அடித்து உருட்டியபடி டெல்லி செல்லலாம்.

 

(8) வாடகை சைக்கிள் ரிக்சா பிடித்து டெல்லி சென்று மனு கொடுக்கலாம்.

 

இப்படி எதாவது ஒரு காரணத்தை கூறி ஒரு விஷயத்தை இழுக்க என்ன வேண்டுமானாலும் கூறலாம்.

 

இவரது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா முழுதும் தொலைபேச ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா தொலைபேசி திட்டம் கொண்டு வந்ததாக தம்பட்டம் அடிக்கும் பெரியவருக்கு, இலங்கையில் தமிழருக்கு பேரிழப்பு ஏற்படும் போது இன்னும் தந்தி அடிக்கும் முறை மட்டுமே ஞாபகம் வருவது ஆச்சரியம் அளிக்கிறது.

 

இந்த கட்டுரையை பின்வரும் இணைய தளத்திலும் காணலாம். திரு.பாஸ்கரன் சுப்ரமணியம் அவர்களால் எழுதப்பட்டது.

http://youthful.vikatan.com/youth/baskaranarticle23042009.asp

இவரது பிற படைப்புகளைக்காண http://bashkaran.blogspot.com/ செல்லுங்கள்

Thursday, April 23, 2009

இந்த நோட்டு யாருக்கு வேண்டும்?

பிரபல பேச்சாளர் ஒருமுறை 200 பேர் கொண்ட கருத்தரங்கத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் தன்னிடமிருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை கையில் உயர்த்தியவாறு " இந்த நோட்டு யாருக்கு வேண்டும்?" என் வினவினார். கூட்டத்தினர் கைகளை மேலே உயர்த்தினர்.

 

"உங்களில் ஒருவருக்குத்தான் இந்த பணத்தை தரப்போகிறேன் " என்றவர் கொஞ்சம் பொறுங்கள் என்றவாறே கையில் இருந்த நோட்டை கசக்கியபின்  "இன்னும் இதை விரும்புவோர் உண்டா" எனக்கேட்டார். மீண்டும் அனத்து  கைகளும் மேலே  உயர்ந்தன.

 

"நல்லது" என்று சொல்லி அந்த பணத்தை தரையில் போட்டு தனது பூட்ஸ் காலால் நசுக்கி அதை கையில் எடுத்து மீண்டும் கேட்டார்  "தற்போது வேண்டுமா?"  இன்னும் உயர்ந்தன கைகள்.

 

அவர் சொன்னார். "நண்பர்களே.. இன்று ஒரு மதிப்பு மிக்க பாடத்தைக் கற்றுக்கொண்டீர்கள். நான் இந்த ஐநூறு ரூபாய் நோட்டை கசக்கினாலும், கீழே போட்டு மிதித்தாலும் அந்த நோட்டை விரும்பினீர்கள்... காரணம் அது என்ன செய்தாலும் அதன் மதிப்பை இழக்கவில்லை. அது ஐநூறு ரூபாய் ஆகத்தான் இருந்தது.

 

இது போலவே நமது வாழ்க்கையிலும் நாம் கீழே விழுகிறோம்... கசக்கப்படுகிறோம்... மிதிபடுகிறோம்... நாம் எடுக்கும் சில முடிவுகள் நமக்கு சாதகமானதாக இல்லாத சந்தர்ப்பமாகிவிடுகிறது.

 

ஆகவே நாம் எதற்கும் லாயக்கற்றவர்கள் என் இருந்து விடுகிறோம்.

ஆனால் அப்படியல்ல.

நாம்  நமது மதிப்பை என்றும் இழப்பதில்லை.

எந்த சூழ்நிலையிலும்...

 ஆமாம்... நமக்குள் ஒரு தனித்திறமை உள்ளது..

நமக்கென்று  தனி மதிப்பு உள்ளது

 

நன்றி. திரு, இராம ராமநாதன் அவர்கள்... பாரத் ரி இன்ஸூரன்ஸ்... கோவை.

Wednesday, April 15, 2009

வருடம் என்றும் சித்திரையிலே


என்னதான் சித்திரையை திராவிடக் கூட்டம்

பின்தள்ளி விட்டாலும்

வண்ணமிகு வருடம் என்றும் சித்திரையிலே தான்

பத்திரமாய் பிறக்கிறது

விரோதி வருடம் பெயரால் பயம் காட்டினும்

குணத்தால் நயமே காட்டும் என்பர்

பிறந்திருக்கும் புது வருடம்

நலம் சேர்க்கட்டும்; வளம் சேர்க்கட்டும்

வாழ்கையின் பாதைக்கு ஒளி சேர்க்கட்டும்

புகழ் சேர்க்க வரும் புது வருடத்தில்

தாய் தமிழ் வளரட்டும் தாலாட்டு பாடட்டும்

தாய் மண்ணை வளர்க்கின்ற

தலைவர்கள் கிடைக்கட்டும்

பண்பாட்டை கொண்டுள்ள தமிழர் கூட்டம்

பணத்திற்கு மட்டும் பண் படாமல்

மனத்தையும் குணத்தையும் கொண்டாடட்டும்

மனம் மலரட்டும் மயக்கம் அழியட்டும்

வாழும் காலம் எல்லாம் வளம் வந்து சேரட்டும்.

நன்றி. திரு.இராமராமநாதன் அவர்கள் பாரத் ரி இன்சூரன்ஸ்


Thursday, April 9, 2009

கடவுளை நம்புங்கள்

நீங்கள் கடவுளைப் பிரார்த்தனை செய்தவுடன் அது   நிறைவேற்றப்பட்டால்

கடவுள் உங்கள் நம்பிக்கையை அதிகப்படுதுகிறார்

 

சற்றே தாமதமாக நிறைவேறினால்,

கடவுள் உங்களின் பொறுமையின் வலிமையை அதிகரிக்கிறார்.

 

 

பிரார்த்தனை செய்தும் நிறைவேறவில்லையா?....

 

 

அதை உங்களாலேயே செய்துவிட முடியும் என

 

உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறார்

 

 

... இந்த நல்ல மேற்கோளை மின்னஞ்சலில் அனுப்பி வைத்த பாரத் ரி இன்சூரன்ஸ், கோவை சுனிதாவிற்கு நன்றி

 

Beautiful Belief: If god answers your prayer, he’s increasing your faith. If he delays, he’s increasing your patience. If he doesn’t answer,he knows you can handle….

 

Thank you Ms.Sunitha, Bharat Re Insurance, Cbe.