ADS

AD

Wednesday, December 10, 2008

சில பயனுள்ள(?) தகவல்கள்.... பாகம்....1

ஏலக்காய்: ஏலக்காயின் தோலை எளிதாக நீக்க பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு வெந்நீரில் ஊறவைத்தபின் உரிக்கவும்

 எறும்புத்தொல்லையா:  சர்க்கரை டப்பாவில் இரண்டு அல்லது மூன்று கிராம்புத் துண்டுகளைப் போட்டுப் பாருங்கள்

 பிஸ்கட் மொரமொரக்க: பிஸ்கட் டின்னின் கீழே ஒரு சிறிய பிளாட்டிங் பேப்பரை போட்டுப் பாருங்கள்

 ஆப்பிள் சிவக்காமல் இருக்க:  கொஞ்சம் எலுமிச்சை சாற்றினை அறுத்த ஆப்பிளின் மேல் தடவ ஆப்பிளின் நிறம் மாறாமல் இருக்கும். ஆப்பிளும் ப்ரெஷாக இருக்கும்

 தேள்கடி வலியா: கொஞ்சம் புகையிலையுடன் ஒரு துளி நீர் சேர்த்து கடிமேல் வைத்து பாண்டேஜ் பொட்டால் வலி உடனே மறையும்

 பாகற்காய்: பாகற்காய் சமைப்பதற்கு அரைமணி நேரம் முன்னதாக அறுத்து கொஞ்சம் உப்பு, கோதுமை மாவு மற்றும் தயிர் கலந்த கலவையில் தேய்த்து பின் சமைக்கவும்

 கொத்துமல்லி இலை: அலுமினியக்காகிதத்தில் சுற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைத்துப்பாருங்கள். புத்தம் புதியதாகவே இருக்கும்.

 பாத்திரம் அடிப்பிடித்துவிட்டதா: கொஞ்சம் உறித்த வெங்காயத்துண்டுகளுடன் கொதிக்கும் நீர் ஊற்றி ஐந்து நிமிடம் வைத்திருந்து பின் கழுவிப்பாருங்கள். சுத்தமாக இருக்கும்.

 மிளகாய்த்தூள்: மிளகாய்த்தூள் டப்பாவில் சிறிதளவு பெருங்காயம் போட்டு வைத்தால் மிளகாய்த்தூள் வெகுநாள்வரை அப்படியே இருக்கும்.

 

இன்னும் வரும்….

No comments: