ADS

AD

Monday, December 1, 2008

MUMBAI


தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் 60 மணி நேரத்துப்பாக்கி சண்டைக்குப் பின் தீரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.இதில் ஒரேஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான்.அவன் மூலம் தாக்குதல் பிண்ணனி தெரியவந்தது.

பிடிபட்ட தீவிரவாதியின் பெயர் அஜ்மல் அமீல் கஜா.21 வயதான இவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா இயக்கத் தீவிரவாதி.இவனுடன் மேலும் 10 தீவிரவாதிகள் தாக்குதல் திட்டத்துடன் கராச்சியில் இருந்து படகு மூலம் மும்பைக்குள் ஊடுருவினார்கள்.

சிலர் கொலாபா மார்கெட் பகுதியில் வீடு எடுத்துத் தங்கினர்.சிலர் தாஜ் ஓட்ட்லில் அறை எடுத்துத் தங்கி ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் பதுக்கினர்
திட்டமிட்டபடி 29-ம் தேதி புதன் கிழமை இரவு பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தாக்குதலில் ஈடு பட்டனர்

அப்போது அஜ்மல் தமது கூட்டாளி இஸ்மாயிலுடன் எந்திரத் துப்பாக்கியுடன் வந்து மும்பை அதிரடிப் படைத் த்லைவர் ஹேமந்த் கார்க்கரே,என் கவுண்டர் ஸ்பெஸலிஸ்ட் விஜய் ச்லாஸ்கர்,மற்றொரு அதிகாரியான அசோக் காம்தே ஆகியோரைச் சுட்டுக் கொன்றான்.

பின்னர் கார்க்கேயின் குவாலிஸ் காரில் அஜ்மலும் ,இஸ்மாயுலும் தப்பினர்.”மெரைன் டிரைவ்” என்ற இடத்தில் சென்ற போது கார் நின்று விட்டது.உடனே இருவரும் எதிரே மற்றொரு காரில் வந்த மும்பை வியாபாரிகள் காரமேஷ்,ஆர்ஷா, ஆகியோரை துப்பாக்கி மினையில் மிரட்ட்டி அவர்கள்து “கோடா” காரில் தாக்குதலுக்குப் பறந்தனர்.தந்து காரை தீவிரவாதிகள் பறித்துச் சென்றது பற்றி ஆர்ஷா போலீஸூக்கு தகவல் கொடுத்தார்.

இதற்க்குள் இரண்டு தீவிரவாதிகள் தப்பியது பற்றி தெரிந்ததும் மும்பையில் உள்ள அனைத்துப் போலீஸ் நிலையங்களும் உஷார் படுத்த்ப் பட்டன.

டி.பி. மார்க் போலீஸார் சவுபாதி சர்க்கிள் அருகில் “கோடா” காரை மடக்கினர்.கார் நிற்க்காமல் சென்றதால் துப்பாக்கியால் சுட்டானர்.இதில் இரண்டு தீவிரவாதிகள் மீதும் குண்டு பாய்ந்து,இருவரும் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர்.

உடனே இரண்டு பேரையும் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு நாயர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.தீவிரவாதி இஸ்மாயில் ச்ம்பவ இடத்திலேயே பலியாகி விட்டது தெரிய வந்தது.அஜ்மலுக்கு லேசாக உயிர் இருப்பதை கண்டு பிடித்தனர்.அவனது மார்பில் குண்டு பாய்ந்து இருந்தது.ஆனால் அவன் இறந்த்தது போல் நடித்து தப்பிக்க திட்ட் மிடு இருந்தான்.

போலீஸார் உஷாராகி அவனை ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தானர்.முதலில் சிகிச்சையை ஏற்க மறுத்தான்.

அவனுடன் வந்த இஸ்மாயில் பிணத்தைக் காட்டியதும்,இனி தன்னால் தனியாக ஒன்றும் செய்யமுடியாது என்பதை அறிந்து சிகிச்சையை ஏற்றுக் கொண்டான்.

ஆபரேஷன் மூலம் அவன் மார்பில் இருந்த குண்டுகள் அகற்றப் பட்டன.உயிர் பிழைத்த அவனிடம் தீவிரவாத தடுப்புப் படையினர் விசாரணை நடத்த வந்தனர்.ஆனால் அவன் வாயை திறக்க மறுத்து விட்டான்.

பின்னர் அங்கிருந்து ரகசிய இடத்திற்க்கு கொண்டு சென்று விசாரித்த்ப் பிறகு உண்மையை கக்கிவிட்டான்.தற்போது முமொஐ போலீஸ் விசாரணைக்கு உதவியாய் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு அஜ்மல் அமீல் தான்.

நன்றி : மாலை மலர்.

1 comment:

S.sampath kumar said...

nice very nice
by
mytamilweb.blogspot.com