ADS

AD

Saturday, May 16, 2009

ஆயினும் கனவு காண்போம்.

 

தேர்தல் முடிந்தது

 

எதிர்பார்த்த,  சிலருக்கு எதிர்பாராத முடிவுகள் வந்துவிட்டன

 

இனி இந்தியாவில் பிறந்தவர்கள் மட்டுமல்ல, இத்தாலியில் பிறந்தவர்கள் கூட பிரதமர் ஆகலாம் என இந்திய நாட்டின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

 

கனவு தகர்ந்தது........

 

பிரதம மந்திரியாக திரு எல்.கே.அத்வானிவருவார் என்ற என் போன்றோரின் ஆசைக்கனவு (எதுக்கு உங்களுக்கு இந்த வெட்டி ஆசை?) தகர்ந்தது..

 

இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தகர்ந்தது

 

ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டுள்ள லட்சக்கணக்கான கோடிகள் மீட்கப்படும் என்ற கனவு தகர்ந்தது

 

கோவை மாவட்டத்திற்கு தமிழக அரசின் பார்வை கிடைக்கும் என்ற கனவு தகர்ந்தது

 

ஆயினும் கனவு காண்போம்.

 

நரேந்திரமோடி பிரதமர் ஆகலாம்...

 

வருண் காந்தி ஆகக்கூடும்...

 

இனி...

 

அரசு ஊழியர்க்கு சம்பளம் உயரலாம்...

 

இலவச திட்டங்கள் மீண்டும் வரலாம்...

 

ஜெயலலிதா அம்மையார்க்கு இனியாவது தன் உயர்வு மனப்பான்மை (அகம்பாவம்?) குறையும் என எதிர்பார்க்கலாம்

 

மருத்துவர் ராமதாஸ் தனது மக்கள் தொலைக்காட்சியில் விடிய விடிய ஒளிபரப்பிய இலங்கை வாழ் தமிழர்கள் படும் இன்னல்கள் இனி மறக்கப்படலாம்

 

மருத்துவர் அன்புமணி மருத்துவ மாணவர்களை சோதித்ததை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இனி போராடலாம்.

 

பொறியியல் கல்லூரியில் படித்து விட்டு (அரசு வழங்கும் குறைந்த கட்டணத்தில்) அதிக சம்பளத்திற்கு மேலை நாடுகளுக்கு சென்று விடும் மாணவர்களது கல்விக்கட்டணத்தை திரும்பச் செலுத்தச் சொல்லி போராடலாம்.

 

பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு தற்போது தரப்படும் கடைநிலை ஊழியர்களைவிட குறைவாக தரப்படும் ஊதியத்தொகையை உயர்த்தி தர போராடலாம்

 

வைகோ இனி கட்சி அரசியல் நடத்தாமல் ஒரு தமிழர்நல  இயக்கமாக மாற்றி சேவை செய்யலாம்

 

தீவிரவாதிகள் ஹாய் ஆக உலாவரலாம்...

 

கம்யூனிஸ்டுகள் வழக்கம்போல் அமெரிக்க ஏகாதிபத்தியம், மதவாதம் என்ற தலைப்புகளில் வரும் ஐந்தாண்டுகளுக்கு பேசிக்கொண்டிருக்கலாம்.

 

லல்லுபிரசாத் மாட்டுப்பண்ணையை மீண்டும் துவங்கலாம்.. பால்பண்ணையில் காலை 3.30 மணிக்குள் வாங்கவரும் பால்விலை லிட்டர் 15 என்றும் அதன் பின்னர் தாட்கல் முறையில் மட்டுமே கிடைக்கும் பால் லிட்டர் 55 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்து லாபம் கொழிக்க வைத்து பெயரெடுக்கலாம்.

 

 

தமிழ்மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இனி ஒரு மூன்றாண்டுக்கு அடுத்த சட்ட மன்ற தேர்தல் வரும் வரை அவரவர் வேலைகளை பார்க்கலாம்.

 

 


No comments: