ADS

AD

Tuesday, January 20, 2009

பராக் ஒபாமா

அமெரிக்காவின் 44 வது அதிபராக பராக் ஒபாமா பதவியேற்பு நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு எனக் கேட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தோம். நேரடி ஒளிபரப்பு துவங்கியது. 

ஒரு கட் அவுட் காணோம்.

ஒரு பிளக்ஸ் போர்டு காணோம்.

கறுப்பு பூனைகளைக் காணோம்.

மலையென அணிவிக்கும் துண்டுகளைக்காணோம்.

வாழ்க... வாழ்க என கோஷங்கள் காணோம்.

முன்னால் அதிபரும் இந்நாள் அதிபரும் ஒன்றாக வருகிறார்கள்.

என்ன எளிமை..

என்ன அமைதி...

சுமார் முப்பது லட்சம் மக்கள் கூடியிருக்கும் கூட்டம்.

என்ன ஒழுங்கு...

பராக் ஒபாமா பதவியேற்புக்கு முன் இறைவணக்கம்.

எல்லா மதத்தினரும் பரவிக்கிடக்கும் அமெரிக்க மண்ணில் கிறித்துவ மத பிரார்த்தனை. அனைவரும் கண்மூடி அமர்ந்து பிரார்த்தனையில்...

அமெரிக்காவை இறைவன் வாழ்விக்கட்டும்  என்ற முன்னுரையுடன் பதவியேற்பு விழா.

 நிலவுக்கு சென்றவர்கள் நாட்டில் இறை நம்பிக்கையுடன் அதிபர் பதவியேற்பு விழா..

பதவியேற்பு நிறைவடைந்ததும் அதிபரின் எழுச்சி மிகு உரை...

அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர்படுத்த ...

வரும் சவால்கள்.. அதை சந்திப்போம் என எழுச்சி உரை....

 

எப்போது இங்கு இந்த மாதிரி தலைவர்கள் கிடைப்பார்கள்

வெற்றி பெற்றதும் முதல் உரையாக அரசு ஊழியர்க்கு சம்பளம் ஏற்றவில்லை...

ஏகப்பட்ட இலவசங்கள் வழங்கி மக்களை பிச்சைக்காரர்களாக, சோம்பேறிகளாக ஆக்க வில்லை...

 

மாறாக என்ன ஆக்கபூர்வமான வேலைகளைச்செய்வோம் என்னும் வீரமிகு உரையை கேட்கையிலே அடடா.... இந்தியாவே... என் தமிழகமே.... இம்மாதிரி ஒரு தலைவனைக்கொண்ட கட்சியினை எங்களுக்கு கொடுக்கமாட்டாயா என ஆண்டவனை வேண்டனும்போல இருந்தது...

 

முன்னால் முதல்வரும் இந்நாள் முதல்வரும் ஒன்றாக வரும் நாள் எம் தமிழகத்தில் எப்போது வரும் இறைவா...

 

கட் அவுட் இல்லாமல்,

கார்கள் அணிவகுப்பு இல்லாமல்,

தோள் சுமக்க முடியாத மாலைகள் இல்லாமல்,

மேடையை விழுங்கும் துண்டுகள் இல்லாமல்...

வாழ்க...வாழ்க என விண்ணைப்பிளக்கும் கோஷங்கள் இல்லாமல்

எப்போது எம் நாட்டில் ஒரு பிரதமர் அல்லது முதல்வர் பதவியேற்பு விழா நடக்கும் ஆண்டவா... அகில உலகத்திற்கே கலாச்சார வழிகாட்டியாக இருக்கும் தமிழகத்தில் எப்போது இறைவணக்கத்துடன், பிரார்த்தனயுடன்,

கடவுள் வாழ்த்துடன் பதவியேற்பு விழா நடக்கும்  ஆண்டவா...

 

தமிழகத்தை சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திவரும் கழகங்களே...

எப்போது உங்கள் கட் அவுட் கலாச்சாரம் போகும்...

தோள் பிடிக்காத அளவு வாங்கி மகிழும் துண்டு கலாச்சாரம் எப்போது நிற்கும்... 

ஊரில் உள்ள பாதிப்பேரின் புகைப்படங்களைப்போட்டு பிளக்ஸ் போர்டு

மூலைக்கு மூலை, வீதிக்கு வீதி வைக்கும் கலாச்சாரத்தை நிறுத்துவீர்கள்....

உங்களில் பல பேர் இந்த வைபவத்தை தொலைக்காட்சிகளிலே பார்த்திருப்பீர்கள்..

நமது செயல்பாடுகள் அருவருப்பைத் தரவில்லையா..

 

வெர்றி பெற்றவுடன் கிடாய் வெட்டி பிரியாணி செய்யும் கலாச்சாரத்தை எப்போது விடுவீர்கள்...

இனியாவது ஆக்கப்பணிகளுக்கு அச்சாரம் போடுங்கள்.

அருவருக்க வைக்கும் துண்டு, மாலை, வாழ்க கலாச்சாரத்தை விடுங்கள்.

போலி கடவுள் மறுப்பு கொள்கைகளை கை விடுங்கள்...

 

நம்புவோம் நாம்.  ஏனென்றால் பராக் ஒபாமா சொன்னது போல " மாற்றங்கள் வரும் என் நம்புவோம்"

2 comments:

Anonymous said...

என்ன ஒபமா பெரிசா கிழிச்சிட்டாரு?

எங்க அம்மா பதவியேற்ற போது $150 மில்லியன் செலவு செய்து நாட்டுப் பணத்தை வீணடித்தாரா?

எங்கள் ஜெ. ஜெ காதில் கம்மல்கூட இல்லாமல் ஆட்சி செய்தார். ஒபாமா அணிந்திருந்த உடை ஆடம்பரமானது. இல்லையா?

அம்மாவுக்கு ஒரேஒரு உடன்பிறவா சகோதரி. ஒபாமாவுக்கு பாட்டி கூட இருக்கா?

என்ன சொன்னாலும், எளிமை, அறிவு, அடக்கம் அம்மாவுக்கு மாத்திரம் உள்ளது எனக்கூறி முடிக்கின்றேன்.


ஒபமாவுக்கு மாலை, துண்டு அணியவில்லையா?

கொஞ்சம் பொறுங்க சாமி!

ஒபாமா இந்தியா வருவார்தானே நாம ஆளுக்கொருவரா மாலையும் துண்டு போடாமல விடுவோமா?



புள்ளிராஜா

Anonymous said...

hi hi hi---------