ADS

AD

Thursday, January 8, 2009

ராமலிங்க ராசு

ஒரு வகையில் நான் ராமலிங்க ராசுவை நல்ல மனிதனாக பார்க்கிறேன் ... தான் செய்த தவறை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள நம்மில் எத்தனை பேருக்கு மனம் வரும் ... ஒன்று நாம் சாகும் வரை பொய்யை சொல்லி அந்த தவறை மறைப்போம் ... இல்லை ...வெளி உலகுக்கு உண்மை தெரிய வந்ததும் தற்கொலை செய்து கொள்வோம்(சிலர்).. இது தான் சராசரி மனித இயல்பு ...ஆனால் இவர் எந்த விசாரணை கமிசனும் இல்லை ...சிபிஐ - இல்லை தானாகவே கேட்காத உண்மைகளையும் ஒப்புக்கொண்டுள்ளார் ...

நமது அரசியல் வாதிகள்..

அரசாங்க அதிகாரிகள் ...

டாட்டாக்கள் பிர்லக்கள் அம்பானி-க்கள்

பெண்களை சீரழித்து விட்டு சுதந்திரமாக உலவும் பொறுக்கிகள் .....

இவர்கள் எல்லாம் இன்னும் உண்மையை மறைத்து தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .!!!

தான் செய்த தப்பை ஒப்புகொண்டவன் பாதி திருந்தி விட்டான் என்பது எவ்வளவு உண்மையோ எனக்கு தெரியாது. ஆனால் நாம் செய்த பல தவறுகளை ஒப்புகொல்லாமல் வாழ்பவர்கள் தம் நம்மில் பலர்...

நீண்ட நாளைக்கு பிறகு இந்தியா வில் ஒரு சராசரிக்கு மேலே உள்ள மனிதனை நான் பார்க்கிறேன்...

No comments: