ADS

AD

Sunday, March 15, 2009

தேர்தல் கூட்டணி பந்தயத்தில் பாரதிய ஜனதாக் கட்சி முந்தியது


தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. பகைமை மறந்து பல கட்சிகள் ஒன்று சேர்கின்றன. பழைய கள் புளித்ததுபோல் பழைய நட்பு பிடிக்காமல் பல மாநிலங்களில் கட்சிகள் பிரிந்து போகின்றன. பெரிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகள் கூட்டணி என்ற இடியாப்ப சிக்கலில் இருந்து மீள்வதற்கு முடிந்தவரை மாநில கட்சிகளின் தேவைகளுக்கு ஆமாம் சாமி போட்டு நிலமையை சீர் செய்து வருகின்ன.

இந்த போட்டியில் பாரதிய ஜனதா முதலிடம் வகிக்கிறது. பாரதிய ஜனதாவின் ஆரம்பமே சிக்கலில் துவங்கியது. ஒரிசாவில் 10 வருட நண்பனான பி.ஜு. ஜனதா தள் கூட்டணியில் முரண்டு பிடிக்க, இதற்கு ஆட்பட்டால் மற்ற மாநில கட்சிகளும் ஒரிசாவையே சாக்காக வைத்து தொந்தரவு தரும் என்று நினைத்து புதிய பார்முலாவை செய்து பார்த்தது. ஆதாவது அதிரடியாகக் கூட்டணியை முறித்தது மட்டுமல்லாமல், தற்போது நடந்து வரும் பட் நாயக் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கி கொண்டது. இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த பட் நாயக் முடிவில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவால் ஆட்சியை தக்க வைத்து கொண்டார். இந்த விமோசனத்திற்கு நன்றிக்கடனாக மூன்றாவது அணியில் மத்திய இந்தியாவில் இருந்து முக்கிய பங்கு வகிப்பதாக கூறிவிட்டார்.  பாரதிய ஜனதாவின் இந்த அதிரடி பார்மூலா வெற்றி பெற்றது என்றே கூறலாம். கடந்த வாரம் வரை முரண்டு பிடித்து வந்த மாராட்டிய மாநில சிவசேனா 26/22 என்ற கூட்டணிக்கு ஒத்துக்கொண்டது. சிவ சேனாவின் இந்த நடவடிக்கைக்கு காரணமும் உண்டு. ஒரு புறம் சரத் பவார் சிவசேனாவில் இருந்து பிரிந்த ராஜ் தாக்கரேவின் நவ நிர்மான் சேனாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. மும்பை கொங்கான பிரதேசம், வடக்கு மாவட்டங்களில் இளைய தலைமுறையினரின் மத்தியில் நல்ல மதிப்பு உள்ள நவநிர்மான் சேனாவுடன் ரகசிய கூட்டு வைக்கும் சமயங்களில் இது சிவசேனாவிற்கு கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சிவசேனா மறுபதில் சொல்லாமல் தனது கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது.  மராட்டியத்தை அடுத்து பிகாரிலும் கூட்டணி பிரச்சனையின்றி ஓகே ஆனது. அங்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதால் பாரதிய ஜனதாவுடன் சுமூகமாக செல்வதே நன்றாகப்பட்டது இதனை அடுத்து தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை உடனடியாக முடிந்தது. பாரதிய ஜனதாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் பிற மாநிலங்களிலும் கூட்டணி விரைவாக அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் வாரங்களில் மும்பையில் மராட்டிய மாநில  வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.

thanks to adhilaalai.com

No comments: