கும்பகோணம்: முதல்வர் கருணாநிதி நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் திருக்கடையூர் கோவிலில் ஆயில்ய ஹோமம் செய்தார்.
கருணாநிதி மதம், சாதி, ஆன்மீகம் போன்ற நம்பிக்கையில் மாறுபட்ட கருத்து கொண்டவர். பெரியார் வழியில் நடப்பதாக அடிக்கடி பெருமையாக கூறிக் கொள்வார்.
இந்துக் கடவுள்கள் குறித்து அவர் முன்பு பேசியவை இன்றும் கூட விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அவரும் தனது விமர்சனங்களை நிறுத்தியதில்லை.
இந்த நிலையில் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் கும்பகோணம் அருகில் உள்ள திருக்கடையூர் அமிர்தகேடஸ்வர் கோயிலுக்கு திடீரன வந்தார்.
அங்கு முதல்வர் கருணாநிதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி ஆயில்ய ஹோமம் கோவில் நந்தி மண்டபத்தில் விஸ்வநாத குருக்கள் தலைமையில் நடத்தப்பட்டது.
துணைவியார் ராஜாத்தி பெயரில் ஹோமம் நடந்தது. இரவு 7.30 மணியளவில் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஆயில்ய ஹோம பிரசாதத்தை ராஜாத்தி பெற்றுக் கொண்டார்.
அடுத்து எதிரிகளை வீழ்த்தும் வகையில் கும்பகோணம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யாவாடி பத்ரகாளிஅம்மன் கோயிலிலும் விசேஷ பூசைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதாம்.
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 60 வயது முடிந்தவர்களுக்கு சஷ்டியப்த பூஜை, 70 வயது முடித்தவர்களுக்கு பீமரத சாந்தி, 80 வயதுக்கு சதாபிஷேகம் மற்றும் நீண்ட கால ஆயுள் வேண்டி ஆயில்ய ஹோமம் நடத்தப்படுது வழக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
User Comments
பதிவு செய்தவர்: eyefather பதிவு செய்தது: 28 Mar 2009 11:50 am
uyarthiru muthalvarukku, வணக்கம்.
நீங்கள் ஒரு பகுத்தறிவு கடல். ஏன் உங்கள் மீது ஆயுள் ஹோமம் ? உங்கள் Thiramaiikku ஓர் தகுதிக்கு நம்பிக்கையில்லையா?
பதிவு செய்தவர்: Raman பதிவு செய்தது: 28 Mar 2009 10:09 am
சொல்வது ஓன்று, செய்வதோ மற்றொன்று -- பேஷ் பேஷ்! கேட்கவே ரொம்ப நல்ல இருக்கு! பிராமணர்களையும் பிராமணீயத்தையும் கேவலமாக பேசிவிட்டு இப்போது பிராமணர்களின் வழிபாட்டு முறையை பின்பற்றுவது கழகங்களே பிராமணீயத்தை ஒப்புகொண்டதுக்கு சமம். மேலும் இதுவரை பேசியது அனைத்தும் பொய் என்பதிற்கு அத்தாட்சி இது. இனிமேலும் இந்த பொய் பேசும் முகவின் இந்து எதிர்ப்பு பேச்சுக்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் என்ற முதுமொழி உண்மை ஆகிவருகின்றது.
பதிவு செய்தவர்: கண்மணி பதிவு செய்தது: 28 Mar 2009 09:08 am
ஹோமம் நைவேத்தியம் இது எல்லாம் கை கொடுக்குங்குளா அம்மா? பேசமா கட்சியை அதிமுகவோட இணைத்து விட்டால் போதும் முங்கிய திமுக மேல் எழுந்து விடும். தலைவர் 2 வருசம் சிஎம். அம்மா 2 வருசம் சிஎம் நம்ம இளம் கட்டிளம் காளை ஸ்டாலின் 1 வருசம்.. என்ன சொல்லிறீங்க. நம்ம பாலு அண்ணாச்சியை ஒரு அறிக்ககை விடசொல்லுங்க வெள்ளம் தலைக்குமேல் போகுது ஜான் போனால் என்ன மொளம் போனால் என்ன?
பகுத்தறிவுக் கொள்கை கழகக் கண்மணிகளுக்குத் தான் பொருந்துமே தவிர மற்றவர்களுக்கு அல்ல. ஆகவே இவர் துணைவியார் செய்தது சரி என்றோ?, இது அத்தனையும் எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்றோ?, ஏற்க்கனவே புட்டப்பர்த்தி சாயி பாபா ஒருமுறை வீட்டிற்கு வந்தபோது இப்படி ஒரு பூஜையை யாருக்கும் தெரியாமல் செய்யச் சொன்னார் அதைத் தான் பகுத்தறிவு வழி நிறு செய்திருக்கிறார்கள் என்றோ?, நாளை கேள்வி-பதில் பாணி அறிக்கை வந்தால் ஆச்சரியம் இல்லை